இந்த மாதிரி ஒரு கொடை வள்ளலை பார்க்கவே முடியாது.. நடிகர் மயில்சாமி மறைவு.. கண்ணீரில் திரையுலகம்
யில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். சின்னக்கவுண்டர், தவசி உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்துள்ளார். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
நடிகர் மயில்சாமி சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட. ஏராளமான மேடைகளில் தனது மிமிக்கிரிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.நடிகராக மட்டுமின்றி நெருங்கிய குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். என் மீது அதிகம் பாசம் கொண்டவர்.பழகுவதற்கு இனிமையானவர்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்.
இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்ட மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
சாலிகிராமத்தில் உள்ள, மறைந்த அண்ணன் மயில்சாமி அவர்களின் இல்லம் சென்று அவரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தி, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்- நண்பர்களுக்கு ஆறுதல் கூறினோம். அண்ணன் அவர்கள் தன் தனித்த நடிப்புத் திறனாலும், மனித நேயத்தாலும் என்றென்றும் நம்மிடையே வாழ்வார். என்று அமைச்சர் உதயநிதி ட்வீட்.