விஸ்வநாத் மறைவு. கண்ணீரில் திரையுலகம்.. ச்சா இந்த படமெல்லாம் எடுத்தவர் இவரா. முழு விவரம்.

RIP k viswanath update

இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் கே.விஸ்வநாத் (92) காலமானார்.

சிப்பிக்குள் முத்து - பார்த்துக்கொண்டிருக்கேன். எத்தனையாவது முறைன்னு தெரியல.. . எப்பேற்பட்ட படைப்பாளி/கலாரசிகன் #KViswanath. மறைந்துவிட்டார் என்பதால் கண்ணீரை அடக்கமுடியல.

நடிகை ராதிகா நடித்த லலிதா - திரைப்பட வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பெண் பாத்திரங்களுள் ஒன்று. Middleclass லலிதா தனது வாழ்க்கையோட்டத்தில் சந்திக்கும் நெருக்கடிகள், துயரங்கள் (முதல் கணவர் மரணம்), சந்தோஷங்கள், பந்தங்கள் மற்றும் கடைசியாய் தனது 2ம் கணவன் சிவய்யா மடியிலேயே உயிர் விடும் தருணம் என பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து செதுக்கப்பட்ட படைப்பு சிப்பிக்குள் முத்து.

லலிதாவுக்காக கே.விஸ்வநாத் வைத்திருக்கும் க்ளோசப் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை.

RIP k viswanath update

என்னோட பள்ளி நாட்களில் தெலுங்கில் கே.விஸ்வநாத், மலையாளத்தில் ஃபாசில், தமிழில் பாலுமகேந்திரா தான் ஆதர்சம். எந்தக் கதையையும் மென்மையாக, இதமாக, ரசனையுடன் படமாக்குவது ஒரு கலை. அதில் இயக்குநர் கே.விஸ்வநாத் மாஸ்டர். காலத்தின் தேர்ச்சக்கரம் நிற்காமல் உருள்கிறது.

சங்கராபரணம் சலங்கை ஒலி காவியங்களை படைந்த மாபெரும் இயக்குனர் எனது நண்பர் திரு.கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு இந்திய திரை உலகிற்கு பேரிழப்பாகும் ஆழ்ந்த இரங்கல்.

இந்தியத் திரையுலகின் பெருந்தலை ஒன்று கிரீடத்தோடு சாய்ந்துவிட்டது

கலைப் படங்களை வணிகப் படங்களாய் உயர்த்திய கே.விஸ்வநாத் மறைந்துற்றார்

சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து அவரோடு நான் கலந்திருந்த கலைத் தருணங்கள்

சங்கராபரணம் அவர் பெயரை இசைத்துக்கொண்டே இருக்கும்

புகழ் வணக்கம்.

Related Posts

View all