அஜித் குமார் சார் தந்தை சுப்பிரமணி அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85. முழு விவரம்.

RIP subramani sir latest update

தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜீத் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம்..குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம். -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

-பாஜக தலைவர் அண்ணாமலை.

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். -ஓ.பன்னீர்செல்வம்

Related Posts

View all