கதாநாயகியை கண்ட இடத்தில நாக்கால் சுத்தம் செய்ய சொல்லனுமா? கொதித்த RJ பாலாஜி.. வீடியோ வைரல்.

Rj balaji about animal

2023ம் இறுதியில் ரிலீசான அனிமல் படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு அதுமட்டுமில்லாமல் அந்த படத்துக்கு பிரபலங்களே பயங்கரமாக எதிர்க்கவும் செய்தனர். அந்த படம் 800 கோடிக்கு மேல் வசூலித்தாலும் தமிழ்நாட்டில் அந்தளவு வசூல் செய்யவில்லை என்பதே உண்மை. அப்படியிருக்கையில் சிங்கப்பூர் சலூன் படத்துக்கு ப்ரோமோஷன் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

சிங்கப்பூர் சலூன் படத்தில் RJ பாலாஜி, மீனாட்சி சவுத்ரி நாயகன் நாயகியாக நடிக்க அந்த படம் இந்த வாராம் ரிலீசாக இருக்கிறது. அந்த படத்தின் ப்ரோமோஷன் போது, RJ பாலாஜி அனிமல் படத்தை பற்றி பேச நேரிட்டது. அப்போது அவர் கூறுகையில் “அந்த படத்தில பெண்களை மிக மோசமாக அடித்து கொடுமை படுத்துவதை போலவும், அந்த காட்சியை ரசிப்பது போலவும், ஷூவை நாக்கால் நக்குவது போலவும் காட்சிகள் வருவதாக கேள்விப்பட்டேன்.” அதனால அந்த படத்தை பார்க்க பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Rj balaji about animal

இதுபோன்ற படங்கள் எப்போதும் தமிழ்நாட்டில் ஒர்கவுட் ஆகாது என்பதற்கு இந்த படமே சான்று. நிறைய பேர் வந்து ப்ரொமோட் பண்ணாங்க ஆனால் தமிழ் மக்களுக்கு தெரியும் எந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் கொடுக்கக்கூடாது என்று. அதில் நம்மாளுங்க ரொம்ப தெளிவானவங்க.

சிங்கப்பூர் சலூன் படம் கனா படம் போன்று மிகவும் எமோஷனல் படம், பலரை motivate செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேற அந்த படத்தில் ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் ஒன்று செய்வதாக சொல்லப்படுகிறது.

Video:

Related Posts

View all