அவர் இருக்கறது தெரியாம அவரை இப்படி கழுவி ஊத்துறீங்களே டா.. RJ பாலாஜி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Rj balaji haters meet video

RJ பாலாஜிக்கு மட்டும் எப்படி டிசைன் டிஸைனா இப்படி படத்தை ப்ரோமோஷன் செய்ய யோசனை வருது என்று தெரியவில்லை. ஏற்கனவே வீட்ல விசேஷம் படத்துக்கு நிறைய பேர் வீட்டுக்கே சென்று அழைப்பு கொடுத்தார் அதுவும் கர்பமா இருக்கும் பெண்கள் வீட்டுக்கு சென்று. இப்போ இந்த ரன் பேபி ரன் படத்துக்கும் சற்று வித்தியாசமான ப்ரோமோஷன்.

கன்னட சினிமா சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஒரு முறை பேன்ஸ் மீட் வெச்சிருந்தாரு, அந்த வீடியோ அவரின் மறைவு பிறகு பயங்கரமா வைரல் ஆச்சு. அந்த விடியோவை பார்த்து கண் கலங்காத ஆளே கிடையாது. அவ்வளவு எமோஷனலா இருந்தது. அதையே கன்டென்ட் ஆகி அவர் படத்துக்கு ஒரு ப்ரோமோஷன் பண்ணிருக்காரு நம்ம பாலாஜி.

Rj balaji haters meet video

பேன்ஸ் மீட் அப்டிங்கிறதுக்கு பதிலா haters மீட் அப்டின்னு ஒன்னு வெச்சு, அந்த வீடியோ தான் இப்போ இணையதளம் முழுக்க வைரல். RJ பாலாஜியை பிடிக்காத நாலு அஞ்சு பேரை கூப்பிட்டு வந்து அவரை பற்றி கழுவி ஊத்த சொல்லிருக்காங்க, அதை பின்னாடி இருந்து பாலாஜி ரசிச்சுட்டு இருக்காரு, பின்னர் அவர் என்ட்ரி கொடுக்கும்போது மத்தவங்க ஜெர்க் ஆகிட்டாங்க.

கண்டிப்பா இந்த வீடியோ பல மில்லியன்களை கடந்து ஹிட் ஆகப்போகுது. எப்படி இந்த விடியோவை ரசிக்கிறிங்களோ அதேபோல அந்த படத்தையும் திரையரங்கில் போய் ரசிங்க. எப்போவும் போல காமெடி பண்ணாம கொஞ்சம் சீரியஸ் ரோலில் பாலாஜி பண்ணிருக்காரு. ட்ரைலர் செம்ம சூப்பரா இருந்துச்சு. இந்த படமும் அப்படி இருந்தால் சூப்பரா இருக்கும்.

Video:

Related Posts

View all