பாலாஜி உங்களால இவ்ளோ சீரியஸா கூட நடிக்க முடியுமா.. ரன் பேபி ரன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் RJ பாலாஜி எப்போவுமே ரொம்ப சீரியசான ரோலில் நடிக்கமாட்டாரு, அப்படியே நடித்தாலும் இறுதியில் ஒரு எமோஷன் இருக்கும் அல்லது காமெடியாக முடித்துவிடும். ஆனால் இந்த ரன் பேபி ரன் படம் அவருக்கே கொஞ்சம் விதியசமான படமாக இருக்கும் என்று நினைக்கிறோம். காரணம் இதுவரை வந்த பாலாஜி படங்களிலேயே இந்த படம் தான் ரொம்ப சீரியஸ் மோடில் இருக்கிறது.
இந்த படகில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கியமான ரோல், இவங்க கதாநாயகியா என்று தெரியவில்லை. ஏனென்றால் பாலாஜியுடன் காரில் ரோமன்ஸ் செய்வது போல காட்சியில் இன்னொரு கதாநாாகி இருக்காங்க. அதுபோக படத்தில் crime, போலீஸ், சேசிங் என்று எல்லாமே இருக்கிறது. படம் பிப்ரவரி மூன்று ரிலீஸ் ஆக உள்ளது.
எப்போதுமே பாலாஜி படங்கள் என்றாலே ஒரு ஜாலியான நாலு காமெடி இருக்கு நல்லா சிரிச்சுட்டு போலாம் என்ற mindset தான் மக்களிடத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் experience வேற மாதிரி இருக்கிறது. கடைசி வரை சீட் நுனியில் உக்காரவைப்பாங்க போல. கண்டிப்பா எதோ ஒரு ட்விஸ்ட் இருக்கிறது போலவே இருக்கும் போல கிளைமாக்ஸ் வரைக்கும்.
மேலும் இந்த ட்ரைலரின் தோன்றிய எல்லா கதாபாத்திரங்களும் ரொம்ப சீரியஸாகவே இருக்காங்க. ஒருவர் மூஞ்சியில் கூட சிரிப்பு இல்லை. ஹீரோவே எதோ தப்பு பண்ணிட்டு அதில் இருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் இருப்பது போலவே இருக்கிறது. பாலாஜி அப்படியே மெல்லமாக என்னால் இதுவும் பண்ண முடியும் என்று இறங்கிருக்காரு. பார்ப்போம்.
Video: