ஹன்சிகா கால தடவி பாக்கணும்... இப்படியா பேசுவாங்க.. ரோபோ ஷங்கர் ஆபாச பேச்சு.. வீடியோ வைரல்.

Robo shankar speech on hansika

என்னடா இவ்வளவு ஹன்சிகாவை திரையில் பார்க்க முடியவில்லையே என்று எங்கும் ரசிகர்கள் ஒரு பக்கம், இனி அவ்வளவு தான் சகாப்தம் முடிந்தது என்று எழுதிய பத்திரிகைகள் ஒரு பக்கம் இருக்க இப்போ மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க. நேத்து தான் பார்ட்னர் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆச்சு, அந்த வீடியோ செம்ம ட்ரெண்டிங் இணையத்தில்.

நேற்று ட்ரைலர் ரிலீஸ் போது பிரெஸ் மீட் நடந்தது அதில் படகில் பணிபுரிந்த நடிகர்கள் நடிகைகள் எல்லாம் கலந்துகொண்டனர். எல்லாரும் அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி மேடையில் பகிர்ந்தனர். அப்போது படகில் நடித்த ரோபோ சங்கரின் பேச்சு அங்கு வந்த பத்திரிகையாளர்கள், ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

Robo shankar speech on hansika

அவர் இந்த படத்தில் காமெடியனாக பணியாற்றியுள்ளார். ஹன்சிகா கூட சில காட்சிகள் இருக்கும் போல. அனைவர்க்கும் தெரியும் ஹன்சிகா அழகில் தேவதை ரகம் என்று. காமெடியாக பேசுகிறேன் என்று சொல்லி அருவருப்பாக பேசியுள்ளார் ரோபோ. அவர் பேசியது, ஹன்சிகா காலை தடவனும் என்பது போல காட்சி என்று மிகவும் அருவருப்பாக பேசியுள்ளார் அதுவும் மேடையிலேயே.

அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் மிகவும் கோபமடைந்து, இந்த மாதிரி ஆட்களை எல்லாம் மேடையில் ஏற்ற வேண்டாம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்குப்பின் படக்குழுவினர் எழுந்து வர பேச்சுக்கு மன்னிப்பு கேட்டனர். வாய் இருக்கிறது என்று என்ன வேணாலும் பேசலாமா? கொஞ்சம் நாவை அடக்குவது ரொம்ப நல்லது.

வீடியோ:

Related Posts

View all