எங்களுக்கு ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மீண்டும் பார்க்கணும்.. அது வரும் ஆனா.. லோகேஷ் சொன்ன பதில். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் சொல்லும் ஒரு குறை என்னவென்றால், விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கொஞ்ச நேரம் தான் வருவாரு, மற்ற படங்கள் போல் இல்லை என்று. மேலும் சூர்யா ரசிகர்கள் அந்த rolex கதாபாத்திரத்தால் தான் படம் இந்தளவு ஹிட் ஆனது என்று சொல்லி வருவது கொஞ்சம் கமல் ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. அது எப்போதும் இருப்பது தான்.
தற்போது லோகேஷ் தளபதி 67 படத்தை இயக்கிஉள்ளார். அந்த படம் LCUக்குள் வருமா இல்லையா என்றே தெரியவில்லை, இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. விஜயின் 67வது படத்தின் வேலைகள் படுவேக நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் பிலிம் கம்பனியோன்க்காக பெரிய சவுத் இயக்குனர்கள்/நடிகர்கள் சேர்ந்து ஒரு இந்தெர்விஎவ் கொடுத்தனர். அப்போது இந்த கேள்வி தொகுப்பாளினி அனுபமாவால் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த லோகேஷ், முதலில் நான் இப்போது ஒரு படம் பண்ணி வருகிறேன், அந்த படத்தை முடித்து விட்டு நான் கமல் சாருடன் அமர்ந்து பேச வேண்டும். அதற்குப்பின் கைதி 2 அல்லது விக்ரம் 2வா என்று முடிவு செய்வோம். நான் அடுத்த 10 வருடத்திற்கு செட்டில், இந்த யூனிவெர்சில் நிறைய படங்கள் வரும் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த கருத்துக்கு கமல் ஒரு ரிப்ளை கொடுத்துள்ளார், விக்ரம் படத்தில் நாங்க ஒரு ப்ரோமிஸ் செஞ்சோம், அதனால் கண்டிப்பா அது வருமென்று கூறியுள்ளார்.
ஒருமுறை லோகேஷ் சொல்லும்போது இந்த யூனிவெர்சில் அனைத்து பெரிய ஹீரோக்களையும் மீட் பண்ண வைப்பது தான் லட்சியம் என்று கூறினார். ஹாலிவுட் படங்களில் இது சாத்தியம், மார்வல், DC எடுக்கும் படங்களில் அந்த continuity இருக்கும். அதுபோல லோகேசும் உருவாக்கி வருவது மிகசிறந்த விஷயம். பார்ப்போம் அடுத்தடுத்து என்ன பண்ண போறார் என்று.