அரைச்ச மாவை அரைச்சலும் மாஸ்.. முனி, காஞ்சனா வரிசையில் மிரட்டும் ருத்ரன் டீசர். வீடியோ வைரல்.

நேற்று தனது பிறந்த நாளையொட்டி தனது ஆன்மீக குருவான ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ் அவர்கள். லாரன்ஸ் மாஸ்டர் கிட்ட இருக்கும் பெரிய குணம் மற்றவர்களுக்கு உதவுவது தான். எதனை குழந்தைகள் அவரது ட்ரஸ்ட் மூலம் மறுவாழ்வு கொடுத்திருக்காரு. இந்த ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியங்கள் ஏராளம். இவரைப்போல திரையுலகில் செய்திருக்கிறார்களா என்றால் தெரியவில்லை. அத்தனை பேருக்கு நன்மை செய்துள்ளார்.
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்: இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். #சேவையேகடவுள் என்று சில தினங்களுக்கு முன்பாக ஒரு பதிவு சையது மக்கள் மனதை வென்றார். ராகவா லாரன்ஸ் என்றாலே நடிகர் அப்படிங்கிற விஷயம் அனைத்தையும் தாண்டி மனிதம் என்ற சொல் தான் நினைவுக்கு வருகிறது.

இவருக்கு நடிகராகவும் நிறைய ரசிகர்கள் உண்டு, இவரின் அடுத்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்து கிடைக்கும் பட்டாளம் ஏராளம். இவர் ஒருத்தர் தான் வரிசையாக பேய் படங்களை கொடுத்து ஹிட் கொடுத்தவர், அதுவும் ஒரே கதையை வைத்து. இவருடைய திரைக்கதை தான் இவருக்கு பெரிய ப்ளஸ். ஹரி படம் போல ரொம்ப ஸ்பீடா போகும், காமெடி சூப்பரா இருக்கும். அதனால் குழந்தைகள்/கும்ப ரசிகர்கள் அதிகம்.
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடித்த ருத்ரன் படத்தின் கிலிம்ப்ஸ் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல். அதே மாஸ் மசாலாவை mix செய்து மீண்டும் ஒரு படைப்பு. இதுவும் என்டேர்டைன் செய்யும் என்று நினைக்கிறோம். ஏப்ரல் 2023 ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
Video: