இந்த மூஞ்சிக்கு சீரியஸ் மூட் கொஞ்சம் செட் அவுத்து தான். ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ். ரன் பேபி ரன் முதல் பார்வை வைரல்.
ஆர்.ஜே.பாலாஜி படம் என்றாலே ரசிகர்கள் expect பண்ணி பார்க்க வருவது முழு நீள காமெடி மூவியாக இருக்கும் என்று. LKG படம் மாதிரி ஆனா. இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஒரு கமர்ஷியல் கலவைன்னு தான் சொல்லனும். காமெடி அந்த கன்டென்ட்ட கெடுக்காம கொண்டு போயிருப்பாங்க. சில இடங்கள்ல பாலாஜி ஆக்டிங் ஈரிடேட் ஆகும் அவ்வளவு தான். ஆனால் இப்போது தானே நடிக்க ஆரம்பித்துள்ளார் கற்றுக்கொள்வார்.
மேலும் ஆர்.ஜே.பாலாஜி படங்களில் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும் மிகவும் ஸ்ட்ராங்கா. மூக்குத்தி அம்மன் படம் எடுத்துக்கொண்டால் ஊர்வசி. படத்தை தூக்கி நிப்பாட்டுறது ஊர்வசி. கண்டிப்பா நடிப்பு அரக்கி ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்த அந்த அரக்க வேலைய செமையா செஞ்சிருக்காங்க. குறிப்பா ஏன் பையன் திட்டுறது சரிதான்னு பாலாஜிக்கு சப்போர்ட் பண்ற சீன் மூக்குத்தி அம்மன் படத்தில், அதேபோல எமோஷன் காட்சிகள் வீட்ல விசேஷம் படத்திலும் அடி தூள் தான்.
மேலும் இவர் படத்தில் ப்ளஸ் என்னவென்றால், ஜோசியம் என்ற பெயரில் ஏமாற்று வித்தை காட்டி பணம் பார்க்கும் கும்பலையும் காமெடி வடிவில் வெளுத்து வாங்கிஇருப்பார் ஆர்.ஜே. பாலாஜி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் முழுவதும் பார்க்க வைக்கும். முதன் முறையா இவர் த்ரில்லர் படம் ட்ரை பண்றாரு அந்த படத்தின் பெயர் ரன் பேபி ரன். இந்த படம் இவருக்கு எப்படி செட் ஆகும் என்று நினைக்கும் பொது ஒரு சீரியசான போஸ்டரை ரிலீஸ் செய்து செட் ஆகும் என்று நிரூபித்துள்ளனர் படக்குழுவினர்.
எப்போதும் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் ஒரு சக்தி வாய்ந்த பெண் கதாபாத்திரம் இருக்கும், அந்த கதாபாத்திரம் தான் அவ்வப்போது படத்தை தூக்கி நிறுத்தும், அப்படி இந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம். எப்படியும் அவங்களை சுற்றி தான் படம் இருக்கும், ஐஸ்வர்யா ஒரு படம் செலக்ட் செய்து நடிக்கிறார் என்றாலே கன்டென்ட் தரமாக இருக்கும் என்று தானே அர்த்தம்.