ஆள விடுங்கப்பா. அய்யோ இந்த ஜாதி மதம் எல்லாம் குப்பை. நான் புத்த மதத்திற்கு போறேன். முழு விவரம்.
எனக்கு மதம், சாதி, சடங்கு, புனிதங்கள் என்று எதுவுமே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை. இது எதுவும் இல்லாமலே எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கு. அந்த அடையாளம் தான் தமிழ். என்/எங்கள் ஒற்றை அடையாளம் என்று திராவிடர்களான தமிழர்களின் கருத்து எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் கருத்து வேறுபாடில்லை.
எனக்கு இந்த சாதி, மதம் போன்ற பிரிவுகளில் நம்பிக்கை இல்லை! சாதி - மதம் வெறுப்பவனல்ல! எனக்கு தெரிந்தது எல்லாம் ஒண்ணு தான் - மனித வலி!!! அது பார்ப்பனன், தலித், மற்ற சாதி, மதம் எதுவாக இருந்தாலும் சரி! அன்பு இல்லாதவந்தான் சாதி, மதம் பிடித்து தொங்கிட்டு இருப்பான் என்பது மற்ற சில மக்களின் கருத்து.
ஆகமொத்தம் இந்த ஜெனெரேஷன் குழந்தைகள் ஜாதியை வைத்து அரசியல் செய்ய மாட்டார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. எப்படி ஒரு கலைஞனை, விளையாட்டு வீரர்களை ஜாதி மதம் பார்க்காமல் கொண்டாடுகிறோமோ அப்படி தான் மற்ற இணைத்து மக்களிடமும் பழக வேண்டும். இணையத்தில் தற்போது வைரலாகி வருவது நடிகர் சாய் தீணா புத்த மதத்திற்கு மாறிய சம்பவம் தான். இவர் தெறி மற்றும் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்பற்றி அவர் கூறியது: ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன். நான் ஒன்னும் இப்போ மாறல. போட்டோ இப்போ ரிலீஸ் ஆனதால் எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க அவ்வளவு தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான், மகிழ்ச்சி. மேலும் அவர் கூறியது “புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை, என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஜாதி ஒரு சாக்கடை, குப்பை” என்று கூறி முடித்தார்.