இவங்க யாருன்னு தெரியுதா.. திமிரு ஈஸ்வரி டா.. ப்பா மிரட்டல்.. KGF இயக்குனர்.. சலார் வீடியோ வைரல்.
![Salaar trailer video viral](/images/2023/12/02/salaar-trailer-video-1-.jpg)
KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் “சலார்” படத்தின் ட்ரைலர் வெளியானது. சலார் டிரைலர் பார்த்தா மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் மற்றும் அவனுடைய நண்பன் ஜமுக்கா ரெண்டு பேருக்கும் உள்ள நட்பு பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பகை தான் இந்த படமா எடுத்திருக்காங்க போல என்று தோன்றுகிறது.
KGF2 ல நடித்த Eswari Rao & Ramachandra Raju -வும் சலார்ல இருக்காங்க. அதனால், சலார் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்ல தான் வருது ஆனால், KGF -க்கு கனெக்ஷன் இருக்காது. ப்ரபாஸ்-க்கு அம்மா ஈஸ்வரி இல்ல. இது எல்லாம் ரசிகர்களின் தியரி. ஆனால் படம் வந்தால் தான் உண்மையான நிலவரம் எது என்று புரியும். ஆனால் KGF டோன் அப்டியே இருக்கு. அதுதான் வருத்தம்.
![Salaar trailer video viral](/images/2023/12/02/salaar-trailer-video-2-.jpg)
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்டியலில் இருந்த படம் இது. முன்பு ரிலீசான ஜெயிலர், லியோ எல்லாம் ரசிகர்களை வேற லெவெலில் திருப்தி படுத்தியது. அதேபோல இந்த வருடம் தெலுங்கு ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு அவதாரமாய் பிரபாஸ். அவர் நடிச்ச ஆதிபுருஷ் எவ்வளவு மோசமான தோல்வி என்று தெரியும் அனைவர்க்கும்.
அதில் இருந்து இந்த வருடமே மீள இந்த படம் அவருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் ஷ்ரேயா ரெட்டி, கதாநாயகியாக சுருதி ஹாசன் இன்னும் பலர் நடிச்சிருக்காங்க. ஆனால் ஒரே குறை என்னவென்றால் வசனம் கூட KGFல் வர்ற மாதிரியே இருக்கு.
Video: