உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா? நான் தலைவரை நம்புறேன் 🔥🔥 ரொமான்சும் இருக்கு. சல்லியர்கள் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா. இல்லை நான் தலைவரை நம்புகிறேன். கண்ணீர் வந்து விட்டது கிட்டு அண்ணா. தலைவர் மீண்டும் வருவார். இருந்த ஒரு தலைவன் இப்போ இல்லையென்றாலும், என் தலைவன் விதைத்த வீரம் வாழும், என்றென்றும் நாம் தமிழர்களே. அந்த காலத்தினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி, அந்த காலம் கஷ்டம் நிறைந்தது ஆனால் மகிழ்வுடனும் சுகந்திரமாக இருந்த நாட்கள். நாங்கள் இறக்கும் வரைக்கும் உங்களின் நினைப்பிலே வாழ்வோம் என்பது இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மனநிலைமை.
மிக நேர்த்தியான படைப்பு. “தலைவரை நம்புறேன்…” மனசு கலங்கிடுச்சு. ஆத்மார்த்தமான காட்சி. தமிழர்களின் திரைவரலாற்றில் காவியமாய் இப்படம் நிலைத்திருக்கும். இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகள்.
என்ன ஒரு குறை, முன்னோட்டத்தில் ஈழ தமிழ் இல்லை, இலங்கை தீவின் அமைப்பு மாறியுள்ளது. சம்பவமும், கதாபாத்திரமும் கற்பனை என்ற disclaimer வேறு.
திரைப்படத்திற்காக சில பல சமரசங்கள் செய்து இருந்தாலும். படம் மற்றும் படத்தின் உண்மை அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்.
தமிழர்கள், தமிழ் சமூகம் மீண்டும் மேல் எழட்டும், வாழிய வாழிய வாழியவே.
தமிழ் மக்கள் சிலருக்கு சில முரண்பாடு இருக்கலாம் ஆனால், இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் தேசிய விடுதலை போராட்ட போராளி பிரபாகரன் என்றால் அது மிகையாகாது.
சமரசமில்லா இந்த வீரன் நாம் வாழும் சமகாலத்தில் வாழ்ந்தார் என்ற பெருமை நமக்கு உண்டு, சுகபோக வாழ்க்கை வாழ நினைத்து இருந்தால் வாழ்ந்து இருக்கலாம். மருத்துவம், பிரச்சாரம் போன்ற பணிகளுக்கே பெண்கள் ஏற்றவர்கள் என்ற நிலையைப் பிரபாகரன் அடியோடு மாற்றியிருந்தார். விடுதலை வேட்கையும் உரிமை உணர்வும் கொண்ட வீராங்கனைகளை அவர் உருவாக்கியுள்ள விதம் பாராட்டத்தக்கது.
இந்த படம் அதைப்பற்றி தான் பேசுகிறது. இயக்குனர் கிட்டுக்கு வாழ்த்துக்கள்.
Video: