என்னடா சொல்றீங்க வீரம் படத்தோட காப்பியா இந்த படம்.. சல்மான் கான்.. பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Salman khan veeram movie remake

அஜித் சினிமா வாழ்க்கையில் வீரம் படம் ஒரு முக்கியமான படம். அந்த படத்துக்கு பின் தான் அஜித்துக்கு பேமிலி ஆடியன்ஸ் என்று வர ஆரம்பிச்சாங்க அவர் படத்தை பார்க்க. அதற்கு முன்னாடி எல்லாம் அவர் படத்தை பார்க்க அவ்வளவாக குடும்பத்துடன் போக மாட்டார்கள். வீரம் படகுக்கு பின் தான் அஜித்தும் குடும்ப படங்களாக நடிக ஆரம்பித்தார்.

action படமே நடிச்சாலும் சரி, அதில் குடும்பம், செண்டிமெண்ட் இதெல்லாம் இருக்கவேண்டும் என்று இயக்குனரிடத்தில் சொல்லிவிடுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டுவருகிறது. சமீபத்தில் இயக்குனர் எச்.வினோத் கூட அதை உறுதி செய்தார். தப்பான விஷயம் அவர் மூலம் போய் மக்களுக்கு சேர்ந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருப்பார் போல.

Salman khan veeram movie remake

சரி அதை விட்டுடலாம். இப்போ ஏன் வீரம் பேச்சு அடிபட்டது என்றால். அந்த மெகா ப்ளாக்பஸ்டர் படத்தை சல்மான் கான் ரீமேக் செய்துள்ளார். அந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. வீரம் படகில் வரும் நாசர் கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் வெங்கடேஷ் பண்ணி இருக்கிறார்.

வீரம் படத்தில் தமன்னாவின் அப்பா தான் நாசர், ஆனால் இந்த படத்தில் பூஜா ஹெக்டேவின் அண்ணன் ஆக வெங்கடேஸ்ட் நடிக்கிறார் என்று நினைக்கிறோம்.பூஜாக்கு இந்த படம் பாலிவூடில் பெரிய ரவுண்டு வர உதவும் என்று சொல்லலாம். அவங்க தான் இப்போ எல்லா விதத்திலும் கலக்குறாங்களே. அழகு, டான்ஸ், நடிப்பு என்று பிச்சு உதறாங்க.

அந்த ட்ரைலர் வீடியோ:

Related Posts

View all