சமந்தாவோட அந்த 6 பேக்ஸ் இன்னும் அப்படியா தான் இருக்கு.. ஒர்கவுட் அரக்கி.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமந்தா சமீபத்தில் ஒரு அரியவகை எலும்பு வியாதியால் பாதிக்கப்பட்டாங்க. இவங்களோட சமீபத்திய ரிலீஸ் யசோதா படத்தின் போதே இவங்களுக்கு செம்ம வலி இருக்குமாம் ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் அந்த படத்தில் நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளர் காசு போற்றிருக்காரு, சம்பளம் வாங்கியிருக்கிறோம் justify பண்ணனும் என்ற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்.
நிறைய நடிகைகள் என்ன பண்ணுவாங்க இதுபோன்ற வழிகள் எல்லாம் வரும்பொழுது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்படும், இல்லனா ஹீரோயின்ன காசு போனாலும் பரவலாயில்லைன்னு தயாரிப்பாளர் மாத்திடுவாரு. அதனால் தான் மற்ற நடிகைகளில் compare செய்யும்போது சமந்தா வேற ரகம். ஆனால் மற்ற நடிகைகளையும் குறை சொல்ல முடியாது, உண்மையாவே வலி தாங்க முடியவில்லை என்றால் என்ன பண்ணுவாங்க பாவம் அவங்களும்.
யசோதா படத்தின் ரிலீசுக்கு முன்னரே கொஞ்சம் பயங்கரமா வலி ஆயிடுச்சு சமந்தாக்கு. ஆனாலும் கஷ்டப்பட்டு சில பட ப்ரோமோஷன் பிரெஸ் மீட்டில் எல்லாம் கலந்துக்கிட்டாங்க. அப்போ கூட தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்கும்போது கண் கலங்கிட்டாங்க. இது ஒரே படத்திற்கான இன்டெர்வியூ மூன்று மொழி ரசிகர்களையும் கவர வேண்டும், என்று அந்தந்த ஊர் சினிமா சேனலுக்கு பிரஸ் மீட் கொடுத்தாங்க.
மேலும் அந்த படம் அதை தொடர்ந்து செம்ம ஹிட் ஆனது. எல்லாராலும் கொண்டாடப்பட்டது, சமந்தா எதிர்பார்த்த மாதிரியே நல்ல வரவேற்பு படத்துக்கு தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம். கொஞ்ச நாள் சமூக வலைத்தளங்களில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த சமந்தா இப்போ தான் மீண்டும் பார்ம்க்கு திரும்பியிருக்காங்க. மீண்டும் அதே உடல் வலிமையோடு காட்சியளிக்கிறாங்க பாருங்க: