சமந்தாக்காக உயிர கொடுக்கலாம் போலையே.. அப்படி இருக்காங்க.. சகுந்தலம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாகுபலி மற்றும் பொன்னியின்செல்வன் படங்களில் எது சிறந்த பீரியட் படம் என்ற விவாதம் வரும் வேளையில், 2015ல் வெளியான விஜய்யின் புலியை விட மோசமான VFX உடன் பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தது. பீரியட் சப்ஜெக்ட் தொடும்போது இயக்குனர் கேர்புல்லா பார்த்து செதுக்கும் ஒரு விஷயம் இந்த VFX.
ஒரு கதை நல்லாவே இல்லையென்றாலும் அந்த படத்தில் கிராபிக்ஸ் நல்லா பண்ணிருந்தா எதாவது ஒரு குறை இருக்கும் என்று மக்கள் மன்னிச்சு விட்ருவாங்க. பெரிய பட்ஜெட் படம், வந்து பார்ப்போம் என்றாச்சும் தோன்றும். பெரிய பட்ஜெட் என்று ப்ரொமோட் பண்ணிட்டு கேவலமா vfx பண்ணினா அவ்ளோ தான். சொல்லி முடிஞ்சது.
அப்படி தான் இந்த சகுந்தலம் படம் ஜனவரி மாதம் வெளியாக வேண்டியது. முன்னாடி ரிலீஸ் பண்ண ட்ரைலர் பாத்திருந்தால் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் vfx எவ்வளவு மோசமாக இருந்தது என்று. இப்போ தான் இரண்டு மாதங்கள் நல்லா ஒர்க் பண்ணி ஒரு அளவு நல்லா பண்ணிருக்காங்க. அந்த உழைப்பு இந்த ட்ரைலர்ல தெரியுது.
மேலும் இந்த படம் சமந்தாக்கு முக்கியமான படம். ஒரு ஹீரோயின் சென்ரிக் படம். படம் முழுக்க சமந்தாவை மையமாக வைத்தே கதை நகரும். ஹீரோயின் சென்ரிக் படம் பெரியளவு பட்ஜெட்டில் இனி வரும் காலங்களில் வரவேண்டும் என்றால் இந்த படம் வெற்றியடைய வேண்டும். பார்க்கலாம் என்ன surprise இருக்கிறது என்று.
Video: