வெளியாகியிருக்கும் சம்ந்தாவின் ஜிம் புகைப்படங்கள். மீண்டு வா தலைவி என கமென்ட்டில் உருக்கம் தெரிவித்திருக்கும் ரசிகர்கள்!

Samantha samantharuth new hot

நடிகர் முரளியின் மகனான அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி திரைப்படத்தில் அறிமுகமானார் சமந்தா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக புகழடையவில்லை சமந்தா‌. 2012-ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படம் சமந்தாவின் வாழ்க்கையையே மாற்றியது. படம் பிரமாண்ட வெற்றி அடைந்தது. சமந்தாவின் மார்க்கெட்டும் எகிறியது.

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Samantha samantharuth new hot

வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘யசோதார ட்ரெய்லருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது.

Samantha samantharuth new hot

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.

முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Samantha samantharuth new hot

உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு.’ என்று உருக்கமாக கூறியுள்ளார். சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும், பூரண குணம் அடைய வாழ்த்து கூறியும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். ஒரு சில நடிகர், நடிகையர்களும் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் மருத்துவமனையில் சமந்தா ட்ரீட்மெண்ட்டில் இருக்கும் பொழுது..‌அவர் யசோதோ படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்திருக்கிறது. கமென்டில் விரைவில் நலம்பெற வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள்.

Samantha samantharuth new hot

Related Posts

View all