தலைவி ரிட்டர்ன்ஸ். சமந்தா தரிசனம் விரைவில்.. கொளுத்துங்கடா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
முன்னாடி எல்லாம் இரண்டு மேஷத்திற்கு ஒருமுறை எதாவது சமந்தா படம் ரிலீஸ் ஆகும்/நிறைய புகைப்படங்கள் ரிலீஸ் ஆகும், ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பாங்க. அந்த புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆனால் கொஞ்ச காலமாய் அது எதுவுக்குமே இல்லாமல் ஒரு மாதிரி இருந்தது நம் சமூக வலைதள டைம்லைன். ஆனால் நேற்று இந்த ‘யசோதா’ படத்தின் அப்டேட் மூலம் மீண்டும் சமூக வலைத்தளம் புத்துயிர் பெற்றுள்ளது. சமந்தா ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.
சமந்தா இப்போ எல்லாம் சோலோ ஹீரோயின் ரோல்கள் தாம் ரொம்ப சூஸ் பண்ணி நடிக்கிறாங்க காரணம் அவங்களோட திறமைக்கு அந்த மாதிரி ரோல்கள் தான் சரி. சமந்தாவை ஒரு லவர் கேர்ள் மாதிரியே பாத்துட்டு ‘தி பேமிலி சீரிஸ்’-ல் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம். அப்படியொரு ஸ்டாண்ட் காட்சிகள், ஒரு மாதிரி டார்க் கதாபாத்திரம். யாருமே எதிர்ப்பார்கல இவ்வளவு பிருட்டலா பண்ணுவாங்கன்னு. அப்படியொரு performance.
அதே மாதிரி கதாபாத்திரத்தை கொஞ்சம் பயந்து பண்ணினா எப்படி இருக்கும், அந்த படம் தான் யசோதா. இந்த படம் ஒரு பான் இந்தியா படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என முக்கிய மொழிகளில் ரிலீஸ் ஆவுது. இதுவரை வந்த ட்ரைலர் கட்களிலே இந்த படம் தான் மிக சிறந்தது என்று தாராளமாக சொல்லலாம். அப்படி தீயாக இருந்தது. வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அதனை பிரச்சனைகளையும் சமாளிக்கும் யசோதா. இது தான் படத்தின் கரு.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிச்சிருக்காங்க. ஆனால் இவங்களோட ரோலை டீசரில் கூட வெளியிடவில்லை, அந்த அளவுக்கு முக்கியமான ரோல் போல. ஆனால் நேற்று ரிலீசான போஸ்ட்டரில் ரொம்ப பெருசா இருந்தது. சமந்தாவை துரத்துவதே வரலட்சுமி தானா, அவங்களுக்கு நெகட்டிவ் கதாபாத்திரமா என்று நினைக்க தோன்றுகிறது. நேற்று வெளியான ரிலீஸ் தேதி போஸ்டர்.
Video: