விஜயின் ஆஸ்தான ஜோடி. சங்கவி பிறந்தநாள் இன்று. ஆளே மாறிட்டாங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிளை போன்ற முக்கியமான விஜய் படங்களில் நடித்து அப்போது முன்னணி நாயகியாக விளங்கியவர் நடிகை சங்கவி. விஜய் சிம்ரன் ஜோடி தான் செம்மயா இருக்கும் என்று சொல்லுவாங்க. அவங்க எல்லாம் சங்கவி - விஜய் ஜோடியின் அருமை தெரியாதோர். பசங்களுக்கு ஏற்ற மாதிரி காதல், கிளாமர், காமெடி என்று இவங்க ரெண்டு பேரு நடிச்ச படங்கள் கலக்கும்.
சங்கவிக்கு விஜய்கூட கெமிஸ்ட்ரி ஒர்க் ஆன மாதிரி வேற யாரு கூடஓயும் ஒர்க் ஆகல. கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் நிரைய படங்கள் பண்ணிருக்காங்க. ஆனா இவங்களுக்கு அடையாளம் விஜய் கூட நடிச்ச சில படங்கள் தான். இவங்க கடைசியா 2019ம் ஆண்டு சமுத்திரக்கனி கூட கொளஞ்சி அப்டின்னு ஒரு படம் பண்ணாங்க. அந்த படம் பெருசா போகல, அதற்குப்பின் சின்னத்திரைக்கு மூவ் ஆகிட்டாங்க.
இவங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள். 45வது பிறந்தநாள். இவங்க ரொம்ப லேட்டா தான் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. ஆறு வருடத்திற்கு முன்னாடி. இப்போ இவங்களுக்கு ஒரு பெண் குழந்தை. கணவர் பெயர் வெங்கடேஷ் அவர் ஒரு பிசினஸமேன். மீனாவோட நெருங்கிய தோழி இவங்க, அவங்களோட நல்லது கேட்டது எல்லா விஷயங்களிலும் பங்குபெற்று துணையா இருப்பாங்க.
இவங்களோட லேட்டஸ்ட் போட்டோ வைரல். செம்ம அழகா தான் இருக்காங்க இன்னும்.