அந்த இடத்தில் கை வைத்து எதோ செய்த நபர்.. பளார் என்று கன்னத்தில் அறைந்த நடிகை. வீடியோ வைரல்.
சானியா ஐயப்பன் தான் அடுத்து மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆவார். அவங்களுக்கு வெறும் 20 வயதே தான் ஆச்சு ஆனாலும் அவன் செலக்ட் செய்து நடிச்ச படங்கள் எல்லாம் வேற மாதிரி. பார்ப்பதற்கு மிடுக்காக, கெத்தா இருப்பாங்க. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி எல்லா வசூலையும் பிரேக் செய்த லூசிபர் படத்தில் முக்கியமான ரோல் இவங்களுக்கு. அதற்காக பெஸ்ட் சப்போர்டிங் ரோல் விருதெல்லாம் நிறைய வாங்குனாங்க.
ரொம்ப சின்ன வயசுல சினிமாவிற்குள் நுழைந்தது இவரோட அதிர்ஷ்டம். தரமான படங்கள் இவங்களுக்கு அமையுது, தரமான படங்களை இவங்க சூஸ் பண்ணி நடிப்பதால் இவங்களுக்கு நிறைய ரசிகர்கள். சமீபத்தில் வெளிவந்த நிவின் பாலியின் ‘சாட்டர்டே நைட்’ படத்தின் டீசர்/ட்ரைலர் செம்ம ஹிட்டு. படத்திற்காக மக்கள் வெயிட் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த படத்திலும் சானியா முக்கியமான கதாபாத்திரம் பண்ணிருக்காங்க.
இந்த படகின் ப்ரோமோஷன்ஸ்காக பிரபல மாலுக்கு வந்த சானியா ஐயப்பனை ரசிகர்கள் சுற்றி வலைத்தனர். அந்த ஈவென்ட் ரொம்ப நல்லாவே போச்சு இந்த சம்பவம் நாடாகும் முன்பு வரைக்கும். அந்த விழாவை முடிச்சிட்டு அவங்க கிளம்பும்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருத்தன் கை வெச்சு எதோ சில்மிஷம் பண்ணிருக்கான், டக்குனு கவனிச்ச சானியா கூட்டத்தின் நடுவே வெச்சே பளார் என்று ஒரு அறை கொடுத்திருக்காங்க.
இவ்வளவு நாளா அந்த வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங். பிரபலங்களுக்கு இதுபோல நடப்பது புதிதல்ல, அந்த காலத்திலிருந்தே இதை அனுபவித்து வருகின்றனர். ஆண்கள் தான் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும். ஆனால் என்னதான் ஆண்கள் நன்றாக இருக்க ட்ரை செய்தாலும் 10 பழங்களில் ஒன்று கெட்டுப்போய் தான் உள்ளது. அதனால் மொத்தமாக எல்லா ஆண்களின் மீதும் பழி சுமத்தப்படுகிறது. CCTV காட்சிகளை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து தக்க தண்டை கொடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் ஒரு பயம் இருக்கும்.
Video: