ஆண்டனி தாஸ் சம்பவம் லியோல.. அம்மாடியோவ் மாஸ் சஞ்சய் தத்.. மிரட்டல் வீடியோ வைரல்.
லியோ படக்குழுவினரிடம் எப்போது அப்டேட் வருமென்று காத்திருக்கிறது திரையுலகம். அப்படி லோகேஷ் இந்தமுறை என்ன குக் செய்து வைத்துள்ளார் என்று பார்ப்பதற்காக ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் அதற்காக வைட்டிங். சரியாக இன்று சஞ்சய் தத் பிறந்தநாள், போட்டோ அல்லது கிலிம்ப்ஸ் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்குமா.
காலையில் தான் ஒரு அப்டேட் கொடுத்தாங்க. 4 மணிக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பது போல் ஒரு ட்வீட். இப்போது பார்த்தால் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் சேர்த்து சஞ்சய் தத் கிலிம்ப்ஸ் வெளியாகி இணையத்தில் வைரல். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ஆண்டனி தாஸ். சொல்லும்போதே பவர்புல்லா இருக்கில்ல.
காலையில் இருந்து ரசிகர்கள் எதிர்பாத்துட்டு இருந்தது என்னவென்றால் எப்படியும் கிலிம்ப்ஸ்ல ஒரு நொடியாவது தளபதியை காட்டிடுவாங்க என்று தான். ஆனால் அவர்களுக்கு இந்தமுறை ஏமாற்றம் தான். ரொம்ப safe, டீசர் வரும்போது தான் காட்டவேண்டும் என்று ரொம்ப clearஆக சொன்னது போல் இருக்கிறது.
இந்த படம் 125 நாட்கள் சூட் போயிருக்கு, இப்போ அந்த படத்திற்கான எடிட்டிங் வேலைகள் எல்லாம் போயிடு இருக்கு. கலர் கிரேடிங், பின்னணி இசை என்று எவ்வளவு வேலைகள் இருக்கிறது. அதுவும் அனிருத்க்கு டபுள் வேலை தான். இந்த படத்திற்கும் வேலை செய்ய வேண்டும், ஜவான் படத்திற்கும் வேலை செய்ய வேண்டும். இரண்டுமே வேற மாதிரி கதை. கொஞ்சம் கஷ்டம் தான்.
Video: