வித்தியாசமான படம்.. வேற லெவல் சப்ஜெக்ட் சந்தானத்துக்கு.. எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க.. செம்ம க்யூட் ரியா. முழு விவரம்.
சந்தானம், ரியா சுமன் நடிப்பில் இன்று வெளிவந்த படம் ஏஜென்ட் கண்ணாயிரம். எப்படி ஒரு படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு நல்ல பாசிட்டிவ் வைப்ஸ் அமைந்தால் படத்தின் லெவல் எந்தளவுக்கு உயருமா, அந்தளவுக்கு இந்த படத்துக்கு எல்லாமே ரொம்ப சூப்பரா அமைஞ்சிருக்கு. அதனால் என்னமோ இந்த படத்துக்கு ஒரு சரியான ஓப்பனிங் கிடைச்சிருக்கு. சந்தானம் இப்போது கதை சார்ந்து படங்களை சூஸ் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
காமெடியை இருந்த சந்தானம் இப்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். என்னதான் காமெடி இவரின் ப்ளஸாக இருந்தாலும் கதை என்ன டிமாண்ட் செய்தோ அதை மட்டும் சரியாக செய்துள்ளார். விஜய் டிவி புகழுக்கு கொஞ்சம் நல்ல ரோல் இந்த படத்தில். இவர் அடிக்கும் லூட்டிக்கு சந்தானத்துக்கு கண்டிப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய counter வந்திருக்கும், ஆனால் இது அந்த மாதிரி படம் இல்லை என்று இயக்குனர் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.
எப்போதுமே கதை தான் ஹீரோ என்று நினைத்து, கொஞ்சம் underplay பண்ணினாலே அதாவது கதை என்ன தேவையோ அதை மட்டும் செய்தாலே அந்த படம் வேற லெவெலில் வரும். எனக்கு மாஸ் சென்ஸ் எல்லாம் வேணும் என்று சொல்லி மாஸ் காட்சிகளை வைப்பது திரைக்கதையோடு ஒன்றி இருக்காது. சூப்பரான கதை, எதையோ தேடி செண்டு எவ்வளவு பெரிய விஷத்தை கண்டு பிடிச்சிருக்காங்க. அடடா இப்படி எல்லாம் நடக்குமா.. அடடே நாடாகும் போலயே என்று நமக்கே தோன்றுகிறது.
அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில் அருமை. சந்தானத்திற்கு அம்மாவாக நடித்த இந்துமதி நிறைய இடங்களில் ஸ்கொர் செய்கிறார். சந்தானத்தின் அசிஸ்டண்டா வரும் ரியாக்கு சூப்பரான ரோல். அவங்க தான் சந்தனத்தை பங்கமா கலாய்ப்பாங்க. அவங்களோட தமிழ் உச்சரிப்பு வித்தியாசமா இருந்தாலும் ரசிக வைக்குது. இன்னும் நிறைய படங்களில் நடிப்பாங்க. இந்த படம் கண்டிப்பா நன்றாக ஓடும், ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மாதிரி படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது நம் கடமை. அப்போ தான் இதுப்போன்ற நிறைய படங்கள் வரும். டிடெக்ட்டிவ் படங்கள் துப்பறிவாளன் படத்துக்கு பின் இப்போது தான் பார்க்கிறோம். இசை, இயக்கம் எல்லாமே ரொம்ப பிரெஷா இருக்கு.
Rating: 3.75/5