படத்தோட முக்கியமான சீன் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. என்ன அவ்வளவு confident ஆ? ஏஜென்ட் கண்ணாயிரம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஏஜென்ட் கண்ணாயிரம் படம் தமிழ் சினிமாக்கே ரொம்ப வித்யாசமான படமா இருக்கப்போகுது. இந்த படத்துக்கு பின் நிறைய ஏஜென்ட் அதாவது டிடெக்ட்டிவ் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நமக்கு என்ன மாதிரி கதை வேணும் என்றால் இப்போ டிடெக்ட்டிவ் என்று பெயர் சொன்னாலே நமக்கு ஆட்டோமேட்டிக்கா mind போவது என்ன ஷெர்லாக் ஹோல்ம்ஸ் விட பெரிய டிடெக்ட்டிவ்வா என்று தான். அதனால் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சரியாக சூஸ் செய்ய வேண்டும்.
சந்தானம் நடிப்பதால் கொஞ்சம் காமெடியா இருக்கட்டும் என்று வெச்சிருப்பாங்க. ஆனால் இதுபோல கதாபாத்திரம் எல்லாம் மனதில் நிற்க வேண்டும். நம்ம எப்போவாவது தான் இதுபோல டிடெக்ட்டிவ் ஸ்டோரி எல்லாம் எடுக்கிறோம், நாம கடைசியா பார்த்தது துப்பறிவாளன் படம் தான் இந்த genre ல, இதுவும் ஒரு genre இதிலும் நிறைய படம் வர வேண்டும் என்பது வருங்கால இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நம்ம தமிழ் சினிமாவில் மாஸ்க்கு முக்கியத்துவம் தருவது போல இந்த adventure, டிடெக்ட்டிவ் படங்களுக்கு எல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வருடத்திற்கு இதில் ஒரு படம் இப்படி வந்தால் நன்றாக இருக்கும். அதுபோல படம் எடுக்கும் இயக்குனர்கள் அதிலே ஸ்டிக் பண்ணி கொள்ளவேண்டும். அப்போது தான் ரசிகர்களுக்கு வருடம்தோறும் எல்லா விதமான படங்கள் பார்த்த திருப்தி இருக்கும். தமிழ் சினிமாவும் அடுத்த லெவெலுக்கு முன்னேறும்.
மேலும் இந்த படம் நிறைய கதவுகளை திறந்துவிடத்தான் போகிறது. பல படங்கள் இந்த பாணியில் அடுத்து வரலாம். இந்த படம் ஹிட் ஆனால் இந்த படத்தின் இயக்குனரே அடுத்த பாகத்தை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார். அப்போ அடுத்த பாகம் வருவது confirm, காரணம் இந்த படம் ஒரு ஹிட் material.
Video: