இந்த வீடியோல கதைய சொல்லாம சொல்லிருக்காங்க. எப்போவும் போல ரியா செம்ம க்யூட். ஏஜென்ட் கண்ணாயிரம் வீடியோ வைரல்.
சந்தானம், ரியா சுமன், புகழ் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வரும் 25ம் தேதி ரிலீஸ் ஆகுது. அடடா சந்தானம் படம் வருதே செம்ம காமெடியா இருக்கும் என்று எண்ணி படத்துக்கு போனீங்கன்னா ங்களுக்கு செம்ம surprise கொடுக்கும் இந்த படம். அப்போ காமெடி இல்லையா என்று கேட்டால் அப்புறம் எதுக்கு புகழ் இருக்காரு, இந்த வீடியோலேயே செம்ம காமெடி ஒன்னு இருக்கு.
இந்த படம் சந்தானத்துக்கு பெரிய லெவல் ஹிட் ஆகனும், காரணம் அப்படி ஒரு த்ரில்லர் படம் இது. அதுமட்டுமில்லாமல் இதுபோல ஏஜென்ட் படங்கள் நிறைய தமிழிலும் வரணும். என்னதான் இந்த படம் ரீமேக் ஆக இருந்தாலும், இந்த படம் ஹிட் ஆச்சுன்னா இந்த படத்துக்கான sequel கதை என்கிட்ட இருக்கு என்று இயக்குனர் மனோஜ் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். மக்களே ஒரு சில நல்ல படங்களை முன்னாடி கொண்டாடம இப்போ கொண்டாடிட்டு இருக்கோம் அதுபோல இந்த படத்தையும் பண்ணி விட்றாதீங்க என்பது தாழ்மையான வேண்டுகோள்.
இந்த படம் ஒரு கேஸை கண்டுபுடிக்க போராடும் ஒரு பிரைவேட் ஏஜென்ட் கண்ணாயிரம் ஓட கதை தான் இது. கடைசியில் அவர் எவ்வ்ளவு பெரிய கேஸை ஒரு துண்டு சீட்டில் ஆரம்பித்தது ஒரு மலையை கண்டுபிடிக்கிறார் என்பதில் இருக்கிறது ஆச்சர்யம். உங்களுக்கு எந்த இடத்திலும் போர் அடிக்காமல் போகும். தமிழ் ஒரு அளவுக்கு பேசத்தெரிந்த கதான்யாகி தான் வேண்டும் என்று ரியாவை தேர்தெடுத்திருக்கலாம். அவங்க தான் டப் பண்ணிருக்காங்க, அதுவே ரொம்ப அழகா இருக்கு.
இந்த படம் ஹிட் ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிறைய கதைகள் வரும், அதுக்கு மக்கள் சப்போர்ட் பண்ணனும். இந்த ப்ரோமோல கதையே இருக்கு, ஆனால் நீங்க திரையரங்கு சென்று பார்த்து கிளைமாக்ஸ் வரும்போது தான் அடப்பாவிகளா இத கூட விட்டுவைக்க வில்லையா என்றளவுக்கு கோபம் வரும்.
Video: