குலு குலு - இது ஒரு Fresh சந்தானம் படம். நம்பி போங்க, என்ஜோய் பண்ணுங்க. முழு விவரம்.

Santhanam gulu gulu movie review

சந்தானம் படத்துலையே இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம். படத்துக்கு படம் எதாவது இயக்குனர் ரத்னா ரத்னாவின் குறி இந்த படத்திலும் தவறவில்லை.

மூன்று படங்கள் எடுத்திருக்காரு, மூன்றுமே வேற வேற genre. இப்படிப்பட்ட இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைச்ச பொக்கிஷம்னு சொல்லலாம்.

சந்தானதிற்கு இந்த படத்தில் ரூ நாடோடி கதாபாத்திரம், எப்போவுமே மக்களுக்கு எதாவது உதவி செய்யணும்ன்னு. அவரை சுற்றி பல கதாபாத்திரங்கள் அப்டியே கதை நகர நகர. முதல் பாத் செம்ம ஸ்பீடு, ஜாலியா போகுது.

டார்க் காமெடின்னா இது தான். சூது கவ்வும் படம் போல.

Santhanam gulu gulu movie review

Santhanam gulu gulu movie review

Santhanam gulu gulu movie review

சந்தானம் கதாபாத்திரத்தின் எமோஷனல் சைடு ரொம்ப சூப்பர். அவரோட back story படத்தோட ஸ்டார்டிங்ல அனிமேஷன் மூலமா காட்னது செம்ம.

இரண்டாம் பத்தி முதல் பத்தி மாதிரியே ரொம்ப சூப்பரா இருக்கு. வில்லனா வர்றவங்க, சந்தானம் டீம் அவங்களுக்கு கொடுத்த வேலையை செம்ம கச்சிதமா பண்ணி முடிச்சிருக்காங்க. கிளைமாக்ஸ்ல எல்லாம் சிரிப்பு தாங்கவே முடியல.

சந்தோஷ் நாராயணன் இசை மிரட்டல். இது எல்லாம் அவருக்கான படம். விளையாடிட்டாரு.

மீண்டும் சொல்றோம் ரொம்ப வித்தியாசமான சந்தானம் படம். கண்டிப்பா மிஸ் பண்ண வேண்டாம்.

Rating: 3.5/5

Related Posts

View all