நீண்ட நாள் கழித்து திரையில்.. ஆள் பாக்க செம்மயா இருக்காரே, ஜோடியா இவங்களும். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
கவுண்டமணி, செந்தில் இப்படியொரு காம்போவ தமிழ் சினிமா அடுத்த தலைமுறையில் பார்க்குமா என்றால் கண்டிப்பா கஷ்டம் தான்.
இந்த தலைமுறை நடிகர்கள் காமெடியனாக நடிக்கும் பாடல் எல்லாம் ஹிட் ஆகிவிட்டால் ஹீரோ ஆகிவிடுகின்றனர், அதனால் அவர்கள் விட்டு சென்ற இடத்தை நிரப்பவே பல வருடங்கள் ஆகிவிடும். ஆனால் 80ஸ்களில் கொடிகட்டி பறந்த காமெடியன்கள் யார் என்றால் கவுண்டமணி செந்தில் தான்.
தற்போது கவுண்டமணி இல்லாமல் செந்தில் மீண்டும் ஒரு முக்கியமான ரோலில் சந்தானம் படத்தில் நடிக்கிறார். செம்ம லோலாயாக இருக்கப்போகுது படம். நம்ம சிரிக்கவைத்த எல்லா காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர்.
பிரம்மானந்தம் இருக்காரு, கோவை சரளா இருக்காங்க.. படத்தின் நாயகி தான்யா. படத்தின் பெயர் கிக். இன்னும் கொஞ்ச நாளில் ஷூட்டிங் போக ஆரம்பிச்சுடுவாங்க. இந்த படத்தோட கேரக்டர் போஸ்டர் தான் இப்போ இணையத்தில் வைரல்.