கனவுக்கன்னி இஸ் back அதுவும் சந்தானத்துடன்.. நல்லா தான் இருக்கு ஜோடி. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
சந்தானம் நடிச்ச டிக்கிலோனா படம் பார்த்திருப்பீங்க, இயக்குனர் கார்த்திக் யோகி படம். எங்களுக்கு தெரிஞ்சு கடந்த சில வருடங்களில் வந்த சந்தானம் படத்திலேயே அதிகம் சிரிக்க வைத்தது இந்த படம் தான். செம்ம ஜாலியான ஒரு பன் ரைடு, படம் முழுசா டல் மொமெண்ட்ஸ் கொஞ்சம் கூட இருக்காது, மூணு சந்தனத்தையும் வைத்து மாஸ் பண்ணிருப்பாரு.
அந்த படத்தில் வரும் சில காட்சிகள் இன்னும் யாரையாவது கலாய்க்க வேண்டும் என்றால் அதை தான் யூஸ் பண்ணுவாங்க. அப்படி ட்ரெண்ட் செட் பண்ணின படம். அனகா ஹீரோயின்னா பண்ணிருப்பாங்க, செம்ம அழகா இருப்பாங்க அதுவும் அவங்க போட்ட டான்ஸ் மூவ்ஸ் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு. இந்த காம்போ திரும்ப வராயிருக்கிறது.
கார்த்திக் யோகி லோகேஷ் கனகராஜ் எல்லாம் நண்பர்கள். ஆனால் பாருங்க எவ்வளவு வித்தியாசமா இரண்டு பேரும் படம் எடுக்கிறாங்க என்று. இந்த படத்துக்கு தலைப்பு வடக்குப்பட்டி ராமசாமி என்று பெயர் வெச்சிருக்காங்க, அங்கேயே நமக்கு சிரிப்பு வரவழைக்கிறது. அந்த கதாபாத்திரத்தை இதுவரை மறக்காத ஆளில்லை.
தற்போது இந்த அழகான குழுவுடன் இணைந்திருப்பது மேகா ஆகாஷ். யாருடா ஹீரோயின்னா நடிக்கப்போறாங்க என்று காத்துட்டு இருந்த ரசிகர்களுக்கு ஒரு செம்ம இன்ப அதிர்ச்சி. தெலுங்கிலேயே படம் பண்ணிட்டு இருந்த மேகாவை மீண்டும் தமிழ் சினிமாக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. இவங்களோட ரசிகர்கள் ரொம்ப மிஸ் பண்ணிருப்பாங்க இவ்வளவு நாளா. ரொம்ப நன்றி இயக்குனரே.