குட்டி நந்தினியா நடிச்சது யாருன்னு தெரியுதா. நம்ம தெய்வ திருமகள் பாப்பா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நேற்று பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகி வரலாறு காணாத அளவுக்கு வசூல் வேட்டை செய்ய தொடங்கியுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் - 1 நாம் அனைவரும் கூச்சலிட்டு மெச்ச வேண்டிய படம். மணிரத்னம் அவருடைய திரைபாணியிலிருந்து சற்று விலகி அடித்திருக்கிறார். கடைசி அரைமணி🌊 நேரம் மெய்சிலிர்க்கும் காட்சிகள். பிண்ணனி இசை நம்மை பின்னிவிடும்.
சோழர்களின் முழு வரலாறு அறிந்திருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. நந்தினி என்கிற ஒரு பாத்திரப்படைப்பு முழுக்கப் புனைவு என்கிற ஒற்றைப் புரிதலோடு பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்தால் போதும்.
நந்தினி - குந்தவை ❤️🔥 இரண்டும் அழகு தான் ஆனால் ஒன்று அன்பானது மற்றோன்று ஆபத்தானது. கல்கியோட எழுத்து அப்படியே பாக்க முடிஞ்சுது. நான் வல்லவரையன் வந்தியத்தேவன். ஆதித்த கரிகாலரின் நண்பன்னு பெருமை பொங்க தன்னை அறிமுகம் செய்துக்கற கார்த்தி கேரியர்ல முக்கியமான படம். மொத்த படத்தின் துள்ளல் நடைக்கு இவரோட எனர்ஜிதான் காரணம். குந்தவை, நந்தினி, பூங்குழலினு எல்லார் மேலயும் லவ் லுக் விடற சீன்லாம் செம்ம க்யூட்.
தற்போது குட்டி நந்தினியாக யார் நடித்திருக்கிறார் என்றால் தெய்வ திருமகள் படத்தில் குட்டி பவாக நடித்த சாரா அர்ஜுன். ஐஸ்வர்யா ராய் என்னும் பேரழகியின் சிறுவயது கதாபாத்திரம் செய்யும்போது, அதே அளவுக்கு அழகாக இருக்க வேண்டும். சாராவை விட்டால் அந்த கதாபாத்திரத்தை ஈடு செய்ய வேறு யார் இருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவில் குட்டி தேவதையாக வளம் வந்தார்.
நந்தினி: கருவூலத்தில் தங்க செல்வங்கள் நிறைய இருக்கிறது..பார்த்து மயங்கி விடாதீர்கள்..
வந்தியத்தேவன்: வைர செல்வத்தையே பார்த்து விட்டேனே..
நந்தினி: மயங்கி விட்டீரா..???
வந்தியத்தேவன்: கொஞ்சம்..
இந்த conversation எங்களுடைய பிக்..!