“தென்னிந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் சரத்பாபு” - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Sarath babu RIP

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளாக நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்த திரைப்பட நடிகர் ஐயா #சரத்பாபு அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ந்தோம்.

நடிகர் சரத்பாபு காலமானார்… முள்ளும் மலரும் படத்தில் அவர் நடித்த அந்த பாடல் காட்சி “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்னோடு மோதுதம்மா!..“இப்போதும் மனக்கண்ணில் காட்சியாக விரிகிறது!

Sarath babu RIP

நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல். பல மொழிகளில் பிரபலமான படைப்புகளுக்கு சரத்பாபு நினைவு கூறப்படுவார் - பிரதமர் மோடி

“பண்பாட்டு மதிப்பீடு மிக்க பாத்திரங்களுக்கு தன் நடிப்பால் தங்கமுலாம் பூசியவர் சரத்பாபு; சரத்பாபுவின் புன்னகை, மரணத்தை மறக்கச் செய்கிறது: கவிஞர் வைரமுத்து இரங்கல்.

கமல் ட்வீட்: சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.

அவருக்கு என் அஞ்சலி.

Related Posts

View all