விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார். சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவில் அன்றே கணித்த சரத்குமார். வீடியோ வைரல்.
நடிகர் சரத்குமார் மிகவும் ஈகோ இல்லாத நடிகர் போலும். சூர்ய வம்சம் எவ்வளவு பெரிய ஹிட் என்று உலகம் அறியும். அந்த படத்தின் 175 நாள் விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டாராக வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு என்று கூறியுள்ளார். அவரின் கணிப்பு இப்போது உண்மையாயிருக்கிறது.
சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார்ஸ் தான். ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை.
யார் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளி வீசுகிறதோ அவரை தான் உண்மையான சூப்பர்ஸ்டாராக ஏற்பர். இவ்வளவு நாள் ரஜினி, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி நடித்த எல்லா படங்களின் சாதனைகளையும் ஒருவர் ஒவ்வொரு படம் மூலம் பிரேக் செய்கிறார் என்றால் அவரும் சூப்பர்ஸ்டாரே.
அந்த வரிசையில் விஜய் படங்கள் ரொம்ப சுமாராக இருந்தால் கூட 100 கோடி அசால்ட்டாக வசூல் செய்கிறது என்றால் அவரின் உழைப்பு தான் காரணம். 10 வருடங்களுக்கு முன் தொடர்ந்து 5 மோசமான பிளாப் கொடுத்த நடிகர், அனைவராலும் அவர் அவ்வளவு தான் என்று நினைத்த ஒரு நடிகர், ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளான ஒரு நடிகர்,
அடுத்த 10 வருடங்களில் இப்படி ஒரு வார்ச்சி கண்டிருக்கிறார் என்றால் அவர் சூப்பர்ஸ்டார் தான். அவர் கண்டிப்பாக இளைஞர்களுக்கு ஒரு inspiration.
Viral Video:
At #SuryaVamsam 175th day function, i said "Vijay will be the Next Superstar". I have proved right. #Varisu @actorvijay @VarisuFilmOff
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) August 1, 2022
- #SarathKumar pic.twitter.com/BWDjO7dk8o