சர்தார் 2 லோடிங். வெறித்தனமான வீடியோ விட்டு உறுதி செய்த படக்குழு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Sardar 2video viral

இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களில் சக்க போடு போட்டு வருவது கார்த்தி நடிச்ச சர்தார் படம் தான். ஸ்பை என்கிற கான்செப்ட் எடுத்து படம் பண்ணுகிறார்கள் என்றால், அதற்கான கிரவுண்ட் ஒர்க் எவ்வளவு பண்ண வேண்டும். ஏனென்றால், netflix, அமேசான் போன்ற தளத்தில் நிறைய ஸ்பை படங்கள் இருக்கிறது. மக்கள் அதையெல்லாம் ரசித்திருப்பர். கண்டிப்பாக காம்பரிசன் வரும். அதையெல்லாம் தாண்டி இந்த படம் ஜெய்த்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் இயக்குனரின் research தான்.

கத்தி படத்துக்கு பின் தண்ணியை பற்றி சரியாக பேசிய படம் சர்தார். அதுவும் மிக முக்கியமான விஷத்தை பகிர்ந்துள்ளார். பாட்டிலில் விற்கும் தண்ணியால் என்ன பிரச்னை ஆகிறது, குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மட்டுமல்ல சிறுவர்கள், பெரியோர்கள் அனைவர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் இது. இதை நாம் கடைப்பிடிப்பதில் தான் இருக்கிறது. கத்தி படம் பார்த்துவிட்டு சிலர் கொக்ககோலா குடிக்கலாம் இருந்தனர். அதுக்குபோல பிளாஸ்டிக் பாட்டில் நீரை தவிர்க்க இதுவொரு புது முயற்சி.

Sardar 2video viral

கண்டிப்பாக இதுபோன்ற படங்கள் வரவேண்டும், அப்போது தான் தெரியாத சில விஷயங்கள் மக்களுக்கு தெரியும். அதுவும் கார்த்தி போல முன்னை நடிகரின் படத்தில் இந்த விஷயம் வருகிறது என்றால் அது பலதரப்பட்ட மக்களுக்கு எளிதில் சென்றடையும். அதையும் மீறி நான் பாட்டிலில் தான் குடிப்பேன் என்று கூறினால் எதுவும் பண்ண முடியாது, அதற்கின பின்விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். இதை தான் கார்த்தி கூட நேற்று நடந்த சக்ஸஸ் மீட்டில் கூறினார்.

இந்த படத்தை தயாரித்தது பிரின்ஸ் pictures லக்ஷ்மன் குமார். இவர் தயாரித்த படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூல் மட்டும் அதிக லாபம் கொடுத்த படம். இந்த படத்தின் சூடு குறையாத முன்னரே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்று எண்ணி, சர்தார் 2 உருவாகிறது என்ற மிகப்பெரிய அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறது படக்குழு.

Video:

Related Posts

View all