இவ்வளவு கெட்டப்ஸ் அய்யோ ஹாலிவுட் லெவல்.. கார்த்தி மிரட்டி விட்டாரு.. ஹாட் ராசி கண்ணா.. சர்தார் வீடியோ வைரல்.
கார்த்தி ஒரு நல்ல versatile நடிகர், இது ஒரு ஆணித்தரமான பதிவு. ஏனென்றால் ஒரு சிலருக்கு மட்டுமே அவங்களோட முகம் எல்லா விஷயத்துக்கும் ஒத்துழைக்கும். அந்த மாதிரி ஒரு பேஸ் கட் கார்த்திக்கு. அவர் எந்த கதாபாத்திரம் செய்தாலும் அவரோட பங்களிப்பு அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப முழுமையா இருக்கும். சீயான் விக்ரமுக்கு பின் இப்படி ஒரு நடிகரை தமிழ் சினிமா பார்க்கிறது என்றால் கார்த்தியை சொல்லலாம். ஏன் சூர்யாவைவிடவே இவர் சூப்பரா நடிப்பார் என்பது அனைவர்க்கும் தெரிந்த உண்மை.
இந்த சர்தார் படம் அவரோட திறமைக்கு கண்டிப்பா தீனி போடும் என்று இந்த டீசர் பார்த்தாலே தெரிகிறது. அவ்வளவு வேகமாக இருக்கிறது டீசர், நடிப்பில் அவ்வளவு பரிமாணங்கள். இந்த டீசர் வருவதற்கு முன்பு இந்த படத்தில் ஒருவர் போலீஸ் இன்னொருவர் வில்லன் என்றே தோன்றியது. ஆனால் இப்போது தான் தெரிகிறது எல்லாருமே ஒருவர் தான் என்று. இந்த படத்தில் ஸ்பையாக நடித்துள்ளார் கார்த்தி.
இந்த படத்தில் இவர் ஸ்பையாக நடிப்பதால் intellectual என்று சொல்லிக்கொண்டு இணையத்தில் சுற்றும் பலர் இதில் என்ன குறை இருக்கு கண்டுபுடிக்கலாம் என்று காத்துக்கிடப்பர். ஆனால் இவர்கள் எல்லாம் விஜய் படம் வந்தால் மட்டும் தான் பயங்கர active ஆக இருப்பர் என்பது மறுக்கப்படாத உண்மை. சினிமா என்றாலே அங்கும் இங்கும் லாஜிக் லூப்ஹோல்ஸ் இருந்தால் கூட படம் நம்மை என்டேர்டைன் செய்கிறதா இல்லையா என்று தான் பார்க்கவேண்டும்.
எப்படிடா ஒரு ஸ்பை இந்தியன் இன்டெலிஜென்ஸ்குள்ள புகுந்து ஒரு ராணுவ ரக்ஷியத்தை வெளியில் விட முடியும். அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று ஒரு கூட்டம் சுத்தும். அதனால் அந்த லாஜிக் எல்லாம் சரியாய் இருந்துவிட்டால் படம் ப்ளாக்பஸ்டர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் தீபாவளி வெளியீடு.
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு தான் வருகிறது. சர்தார் தீபாவளியா? பிரின்ஸ் தீபாவளியா?
Video: