ரொம்பநாள் கழிச்சி சசிகுமார் படம் வின் பண்ணிருக்கு.. மதங்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள்... அயோத்தி ரிவியூ.
நல்ல கதை மட்டுமே போதும்னு நெனச்சு திரைக்கதையில ஜல்லியடிக்காம, சுவாரஸ்யமா அதே சமயம் இயல்பா காட்சிகளை அமைக்க மெனக்கெட்டிருக்காங்க. பார்க்கணும்னு நினைக்குறவங்க தாராளமா தியேட்டர்ல போய் பார்க்கலாம் 👍👍
Such a heartwarming film! : ))
இந்த கதை எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். படம் பேசப்படுகிறது. தமிழ் சினிமாகாரர்களே நல்ல கதாசிரியர் களை பயன்படுத்தி கொள்ளுங்கள். கதைதான் முதல் ஹீரோ. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், அயோத்தி, தாதா ரெண்டுமே நல்ல Works From Debut Directors Ganesh k Babu and Mandhira Moorthy..
Promotions could’ve definitely Been better for Both the Films.. Dada promotions ஆவது கவின் பண்ணாப்ல இறங்கி.. அயோத்தி படம் வந்ததே பாதி பேருக்கு தெர்ல. நடிகர் சசிகுமார் சார் நடிப்பு பிரமாதம்..இப்படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். மதம் மொழி கடந்து மனிதனின் கஷ்டத்தில் பங்கு கொள்ள உணர்த்தும் சிறந்த திரைப்படம்.
இந்த ஆண்டின் மிகச்சிறந்த மனிதநேயத்தை வலியுறுத்தும் படம் #அயோத்தி. எந்தவித சர்ச்சையும் இல்லாமல் மத நல்லிணக்கத்தைப் பற்றிச் சொல்லும் இப்படத்துக்கு மத்திய, மாநில அரசு விருதுகள் குவியும். சசிகுமாரின் வெற்றிக்கு வாழ்த்துகள்.
ஒரு சிலருக்கு எவ்வளவு எமோஷனல் சீனா இருந்தாலும் கண்ணுல தண்ணி வராது ஆனால் அப்படிப்பட்ட அவங்களே சொன்னது, மனசுல ஈரம் வத்திப்போனதால படம் பாத்து அழுதே பலகாலம் ஆச்சு. அப்டிபட்ட எனக்கே கண்ணீர் வர வெச்சுருச்சு #அயோத்தி படம். அதும் லாஸ்ட்ல சொன்ன ஒரு வார்த்தைல வெடிச்சு அழுதுட்டேன் 🥺
ராமர் கோயில், காசி, ஜெய் ஸ்ரீராம்-னு தொடங்கி சில பேரோட செவுட்டுல அடிச்சுருக்கு.
Rating: 4/5