காரி படம் முக்கியமான பிரச்னை பற்றி பேசுது. சசிகுமார் இஸ் back.. மாஸ் பண்ணிட்டாங்க. முழு விவரம்.
சசிகுமார் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த நான் மிருகமாய் மாற படம் அந்தளவுக்கு பெருசா போகல. காரணம் ‘‘Non லீனியர் திரைக்கதை" என்று சொல்லலாம். சசிகுமார்க்கு மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவரோட அந்த கிராமத்து டச் தான். அந்த மாதிரி கதை அமைந்தால் சும்மா மிரட்டி விட்டிருவாரு. அதனால் தான் இந்த காரி படம் highly recommended.
இந்த படம் முக்கியமான பிரச்னை பற்றி பேசுகிறது. ஒன்னு லைன் என்று எடுத்து பார்த்தால் விளங்குள துன்புறுத்தலை சொல்லலாம். இதுஒரு புறம் இருக்கா நேற்று,
ஜல்லிகட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 பேர் அரசியல்சாசன அமர்வில் விசாரணை தொடங்கியது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைகிறது: பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் வாதம். பீட்டா அமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடை செய்ய முயல்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டு பண்பாட்டினை அழிக்க அதிமுக அரசு துணையுடன் பாஜக முயல்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்த படத்தில் அதற்கான முக்கியமான பதில்கள் எல்லாம் இருக்கிறது. காரி படத்தின் ட்ரைலர் வந்தபோதே இந்த படம் நல்லா தான் வந்திருக்கும் என்று உள்-மனம் சொல்லிக்கொண்டே இருந்தது, அது தற்போது உண்மையாகியுள்ளது. இந்த மாதிரி படங்கள் தான் சசிகுமார் செலக்ட் செய்து நடிக்கவேண்டும். நீண்ட நாட்களாக ஹிட்டுக்கு ஏங்கிட்டு இருந்த இவருக்கு இந்த படம் ஹிட்டாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி எங்கு உறுதியானது என்றால் நம் கலாச்சாரத்தை பற்றியும் சூப்பரா பேசிருக்காங்க. வசனம் தெறிக்குது.
வில்லனாக வந்த JD சக்ரவர்த்தி அந்த கார்பொரேட் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு வில்லன். நமக்கே கோபம் வரவழைக்கிறது அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும், அப்போ உண்மையாகவே இப்படி தான் செய்றங்களா என்று எண்ணத்தோன்றுகிறது. ஹீரோயின்னா வரும் பார்வதி அருணுனுக்கு சூப்பர் டெபிட். கண்டிப்பா அடுத்தடுத்தது ராமிலில் நிறைய படங்கள் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அம்மு அபிராமி, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா சின்ன ரோலில் வர்ராங்க. ரொம்ப நல்ல இருக்கு. கொஞ்ச நேரமே வந்தாலும் அவங்க வேலையை சரியா பண்ணிருக்காங்க. இசையமைப்பாளர் ஈமானின் இசை இந்த படத்துக்கு கூடுதல் பலம்.
கண்டிப்பா பாருங்க, disappoint ஆக மாட்டீங்க.
ரேட்டிங்: 3.5/5