ஒரே போன் கால் கை அப்படி நடுங்குது.. ஹரிப்ரியா வேற செம்ம ஹாட். நான் மிருகமாய் மாற லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நான் மிருகமாய் மாற சசிகுமார் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகுது. எந்த ஹீரோக்கும் இதுவரை அமையாத ஒரு விஷயம் இவருக்கு இந்த படம் மூலமா அமைஞ்சிருக்கு. என்னவென்றால் இந்த வாரம் நான் மிருகமாய் மாற படம் ரிலீஸ், அடுத்த வாரம் காரி படம் ரிலீஸ். மூன்றாவது வாரத்தில் இருந்து ரசிகர்கள் இவருடைய எந்த படத்துக்கு போலாம் என்றே குழம்பி போய் விடுவர். அதுவும் இரண்டு படமும் நல்லா இருந்துவிட்டால் மக்கள் குழம்பியே எந்த படத்துக்கு போலாம் என்று விழி பிதுங்குவர்.
சசாய்குமார் ரொம்ப versatile நடிகர். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப எதார்த்தமான படங்கள். மண் சார்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாம் செம்ம ஹிட்டு. ஒரு சில படங்கள் தப்பி போனாலும் மற்ற படங்கள் எல்லாம் அதிக ரிப்பீட் value இருக்கும் படங்கள் தான். இவர் படம் என்றால் தைரியமாக குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் ஆபாசம் இருக்கவே இருக்காது.
தற்போது வெளியாக இருக்கும் நான் மிருகமாய் மாற படம் சற்று வித்தியாசமான படம். சசிகுமார் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். அசுரவதம் படம் மூலம் த்ரில்லர் படங்களை ஆரம்பித்த சசிக்கு இந்த படமும் த்ரில்லர் தான். த்ரில்லராக இருந்தால் பரவாயில்லை, இது ரத்தம் சொட்ட சொட்ட brutal ஆ அல்ல இருக்கு. இதற்கு குடும்ப ரசிகர்கள் வருவார்களா என்று தெரியவில்லை. வல்லக்கோட்டை படத்துக்கு பின் மீண்டும் ஹரிப்ரியா இந்த படத்தில் (தமிழில்) நடிப்பது மகிழ்ச்சி.
சமீபத்தில் வெளியான ஸ்னீக் பீக் படத்தின் hype பயங்கரமா ஏத்துது. விக்ராந்த் இந்த படத்தில் வெறித்தனமான வில்லனா இருப்பார் போல. விக்ராந்த் போன் வரும்போதெல்லாம் சசிக்கு கைநடுக்ககம், முகத்தில் அவ்வளவு பயம் அதெல்லாம் அப்படியே தெரிகிறது. வேற லெவெலில் நடித்திருக்கிறார்.
Video: