ஸ்வயம் சித்தா இஸ் back.. அப்படியே அதே அழகு.. சத்யசோதனை லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கொஞ்ச வருடத்திற்கு முன்னாடி ஒரு பெரிய வெப் சீரிஸ் ஒன்னு தமிழில் பிரபலமானது காரணம் அவங்க தேர்தெடுத்த அந்த கதைக்களம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை. ஒரு உண்மையான தமிழ்நாடு ரவுடிய, காங்ஸ்டர் பற்றிய கதை. அவன் பெயர் தான் ஆட்டோ ஷங்கர். அந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வெப் சீரிஸில் நாயகியாக நடித்தவர் ஸ்வயம் சித்தா, அந்த தொடருக்கு பின் அவங்களுக்கு நிறைய வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மற்ற மொழிகளில் பிசி ஆகிட்டாங்க தமிழை தவிர. இப்போ மீண்டும் கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குனர் அவர் இயக்கிய இரண்டாவது படத்தில் அவங்களை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்.
இந்த படத்தின் பெயர் தான் சத்தியசோதனை. இந்த படத்தில் பிரேம்ம்ஜி தான் ஹீரோ. நீண்ட நாள் கழித்து பிரேம்ஜி ஒரு நல்ல கதையில் நடிக்கிறார் என்று நினைக்கிறோம். அவருக்கும் வயசு ஆயிடுச்சு, இதுபோல நல்ல ரோலில் நடித்தால் இன்னும் நீண்ட நாள் நிலைக்கலாம். பிரின்ஸ் படத்தில் நெகட்டிவ் ரோல் பண்ணாரு ஆனால் படம் பெருசா ரீச் ஆகல.
இந்த படத்தில் இவங்களை எல்லாம் தவிர ஒரு பாட்டி ரொம்ப முக்கியமான ரோல் பண்ணிருக்காங்க போல. அவங்க தான் போஸ்டர்ல எல்லாம் கூட இருக்காங்க. அதுபோக விஜய் டிவி சீரியல் பிரபலம் ராதிகா வேற நடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் சேலஞ்சிங் ரோல் என்று நினைக்கிறோம்.
Video: