கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு.. கர்ஜிக்கும் குரலிலும் காதல் உண்டு.. சீமான் பாடிய பாட்டு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

எனக்கு வயது 28 ஆனால் இதுவரைக்கு இந்த பாடலை கேட்டால் ஓர் சொல்ல முடியாத உணர்வு. 90’s kid’s மனதுக்கு இன்றும் நெருக்கமான பாடல் என்றால் இது தான். தற்போது 45, 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள். காலத்தால் அழிக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று.
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி உன் முகம் தான் ❤❤❤ மனதை கொள்ளை கொள்கிறது இந்த வரிகளும் இசையும். சில பாடல்களை கேட்கும் போது தான் மனம் தானாக அமைதி ஆகிவிடுகிறது. இந்தப்பாடல் காட்சியில் நடித்த, பாடிய, இசையமைத்த அனைவரையும் நினைவுகொள்ளும் நாம் தமிழில் இருந்து இவ்வளவு அழகான வரிகளை செதுக்கிய ரா.ரவிசங்கர் என்னும் கவிஞனை நினைவில் கொள்வதே இல்லை. இன்று நினைவு கூறுவோம்.

காலம் கடந்தாலும் காதல் மட்டும் தேய்வதில்லை…. அதுவும் ஒருதலைபட்ச காதல் மறக்கவும் முடியாது மறைக்கவும் கொடியது. காலம் ஓடிக்கொண்டே இருக்கு. இப்பாடலைக் கேட்கும் போது சின்ராசு போல் நம்மளையும் கையில் பிடிக்க முடியாது.
அரசியலை தாண்டி சிறந்த பேச்சாளனாக சீமான் அவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அதையெல்லாம் தாண்டி இவரு சூப்பரா பாடுவார். அதுவும் ரோசாப்பூ ஒரிஜினல் பாட்ட விட நீங்க பாடுற பாட்டு தான் மனசுக்குள்ள ஏதோ பண்ணுதுணா. ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், நீங்க கலைஞன்ணே. அதை ஓத்துக்கிட்டு தான் ஆகணும். மண் மனம் மாறாத குரல் வளம்.
வீடியோ:
What a Voice Sir.. 😍🔥
— Black Sheep (@BlackSheepTamil) December 2, 2022
.
Blacksheep’s Panchu 80 With PA Arts♥️
.#BlacksheepsPanchu80 #Seeman #BlacksheepsPanchu80withPAArts #PanchuArunachalam #Panchu80 #PanchuArunachalam80 #Blacksheep #BlacksheepTV pic.twitter.com/uM3rKaAf3N