என்னது சீனு ராமசாமி சம்பவம் பண்ண ட்ரை பண்ணாரா உங்கள.. மனீஷா யாதவ்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Seenu ramasamy controversy

தமிழ் சினிமாவின் ஒரு தரமான இயக்குனர் யாரென்ற லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பா சீனு ராமசாமிக்கும் ஒரு இடம் இருக்கும். அவர் எடுத்த படங்கள் எல்லாம் மண் சார்ந்த படங்களாக தான் இருக்கும். இப்போ பெரிய குற்றசாட்டு அவர்மீது வைக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் இடம் பொருள் ஏவல் படம் ஷூட்டிங்கின் போது அவர் நடிகையிடம் சில்மிஷம் செய்ய ட்ரை பண்ணாரு என்பது தான்.

பத்திரிகையாளர் பிஸ்மி அவர் போடும் ஒரு வீடியோவில் அதை போட்டுடைத்துள்ளார். எப்போதுமே ஆதாரம் இல்லாமல் வாய்க்கு வந்ததை அடிச்சுவிடும் பிஸ்மி இந்தமுறை ரொம்ப ஸ்ட்ராங்கா அந்த நடிகை கொடுத்த வாக்குமூலம் ஆதாரமாக இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கம் மூலம் ரிப்ளை கொடுத்துள்ளார்.

Seenu ramasamy controversy

“வணக்கம், நான் சந்திக்காமலேயே அலைபேசியில் கூட உரையாடல் செய்யாமல் என்னைப் பற்றிய அவதூற்றின் வேரை பிடுங்கிய குமுதம் நிறுவனத்திற்கும் அதன் தலைமைக்கும் நெஞ்சார்ந்த அன்பு, நன்றி.

என் திரைப் படங்களில் நான் நீக்கிய ஆண் கலைஞர்களின் பட்டியல் ரொம்ப நீளமானது தொழில் நுட்ப வல்லுநர்களும் சேர்த்து அதிர்ச்சியானதும் கூட அட்வான்ஸ் கொடுத்த பின்னும் அந்த விபத்து நடந்திருக்கிறது. தவிர்க்க முடியாமல்?

அதில் பெண்கள் மிக மிக குறைவு ஆனால் ஆண்களை விட பெண்கள் இப்பவும் மகத்தானவர்கள்.

ஒரு சூழலில் இணைந்து செயல் பட முடியாவிட்டாலும் மறு சூழ்நிலையில் அவர்களோடு இணைந்து பணிபுரியலாம்,

கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பில் இருக்கிறேன்.

இவ்வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் என் மூத்த மகளுக்கு ஒரு ஆங்கில கவிதை தொகுப்பும் ஒரு சிறந்த படத்தையும் பரிசாக தர மனதில் உறுதி ஏற்றேன்.

கவிதை நூல் வந்து விட்டது படமும் விரைந்து வரும்..

தேனியின் வானிலை சிறப்பாக இருக்கிறது.

அது நடக்கும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி.”

இதற்குப்பின் அதற்கு பதிலடியாக அதற்கு சம்மந்தப்பட்ட நடிகையே காலத்தில் குதித்துள்ளார். அந்த ட்வீட் தான் இப்போது இணையத்தில் வைரல்.

--

Video:

Related Posts

View all