என்னடா பெரிய விஜய் அஜித் கிளாஷ்.. இப்போ வர்றது அண்ணன் Vs தம்பி. யார் அடிக்கப்போறா பந்தயம். முழு விவரம்.
காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் கரை சேர்ந்து விட்டோம் என அர்த்தம். இறைவன் அருள். ஐயோ ஏதாவது தவறாக போய் விடுமோ என கலங்கத் தேவையில்லை.
எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “ கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல “ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை. இது எல்லாம் இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள்.
இது எல்லாமே அவரின் அனுபவங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உறுதி அவர் எழுத்தில் தெரிகிறது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்த நான் தவற மாட்டேன் என்று அவர் நடித்த பகாசுரன் படத்தை தம்பி தனுஷ் படத்தின் வாத்தி ரிலீஸ் தேதிலையே விடுகிறார்.
தனுஷ் வாத்தி படமும், செல்வாவின் பகாசுரன் படமும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. என்னடா விஜய் அஜித் கிளாஸ். பிப்ரவரில வருது அண்ணன் தம்பி கிளாஷ். இந்த கிளாசில் பந்தயம் அடிக்கப்போறது யார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.