செல்வராகவன் வேற ரகம்.. என் அப்பன் அல்லவா.. சிவ சிவா.....யம்! கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது. பகாசுரன் வீடியோ வைரல்.
நட்டி, செல்வராகவன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் பகாசுரன். இந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி. இவர் எடுத்த கடந்த இரண்டு படங்கள் எவ்வளவு சர்ச்சையை கிளப்பியது என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இவர் செய்வது தவறு என்று பலர் கருத்துகள் வந்தன, ஏனென்றால் இவர் ஒரு சமூகத்தை பற்றி மிகவும் தவறாக படம் எடுக்கிறார் என்று.
இயக்குனர் வெற்றிமாறனிடம் ஒருவர் இந்த கேள்வியை கேட்டபோது அவர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது, எப்படி சினிமாவில் ஒரு சமூகம் இவ்வளவு நாள் அடைந்த வலிகளை பற்றி படம் எடுத்து மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று நினைத்து படமாடுகிறார்களோ, அதேபோல் மோகன் ஜி எடுக்கும் படங்களில் அவரின் சமூகம் எப்படி பாதித்துள்ளது என்பதை பற்றியும் அதனால் அவரவர் கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி படமெடுப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறினார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ரொம்ப எளிமையாக சொன்னபோனால், நீ உன்னோட சமூகத்தோடு வலியை சொல்ற, நான் என்னோட சமூகத்தின் வலியை சொல்லுறேன். ஆனால் இரண்டு சமூகத்திற்கும் வலி ஒண்ணுதான் என்று சொல்ல முடியாது. அது வேற மாதிரி.
தரிப்பது அவர் எடுத்திருக்கும் இந்த பகாசுரன் படமும் அப்படி ஒரு சப்ஜெக்ட் தான் டீல் செய்கிறது. டீசரில் பார்த்தபோதே தெரிந்தது கண்டிப்பாக இந்த படம் கொஞ்சம் மிரட்டும் என்று, சாம் CS இசைக்கும், செல்வராகவன் screen ப்ரெசென்ஸும் வேற ரகம். நாட்டையும் மிரட்டுறாரு. இவங்க ரெண்டு பேரோட காட்சிகள் எல்லாம் அனல் பறக்கும் என்றே சொல்லலாம். தற்போது அந்த படத்தின் முதல் சிங்கிள் வெறித்தனமாக இருக்கிறது.
பயங்கரமான பக்தி பாடல், வாதம் செய்துவிட்டு வந்து சாமி கும்பிடும் போது வரும் பாடல் போல தோன்றுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போது அதாவது சிவபெருமானை வணங்கும் அனைவரும் இப்பாடலைக் கேட்டால் ஆடி விடுவார்கள்.
வைரல் வீடியோ: