இதையெப்படி பார்க்க மறந்தீங்க. வேற லெவல் detail பண்ணிருக்காரு மணி. புரியலையா? முழு விவரம்.
![Senthan amuthan look ponniyin selvan](/images/2022/10/24/senthan-amuthan-look-ponniyin-selvan.jpeg)
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. யார் சோலா வாரிசு என்று. ஆனால் அது புத்தகம் படித்தவர்களுக்கு தெரியும் சேந்தன் அமுதன் தான் உண்மையான சோலா வாரிசு என்று. அதை ஒரே பிரேமில் விளக்கியுள்ளார் மணிரத்னம். இது எல்லாம் நாம் படத்தை திரும்ப திரும்ப பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது வெறும் ஒரு நொடி வரும் காட்சி.
சேந்தன் அமுதன் தான் உண்மையான சோழ வாரிசு, அடுத்து மன்னன் ஆவதும் அவர் தன். அம்மா தன் உண்மையான மகனை ஓர கண்ணால் பார்த்து மனவேதனை படுறாங்க என்பது தான் அந்த காட்சி. கண்டராதித்தனாருக்கும், அவருடைய துணைவியார் செம்பியன்மாதேவிக்கும் பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது சரியான தருணத்தில்.
![Senthan amuthan look ponniyin selvan](/images/2022/10/24/senthan-amuthan-look-ponniyin-selvan-1.jpeg)
அருண்மொழிவர்மனுக்கு மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருண்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது. அதுபோன்ற காட்சி ட்ரைலரில் நாம் பார்த்தோம்.
எது மதுராந்தகன் உன் மகன் இல்லையா ? சேந்தன் அமுதன் தான் உன் மகனா? பழு பிரதர்ஸ் - எங்களை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்ற மோடில் தான் இருக்கப்போகிறார்கள். நாங்கள் கொஞ்சம் இதை காமெடியா கூறியுள்ளோம்.
கல்கியின் நாவலை படித்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சேந்தன் அமுதன், பார்த்திபேந்திரன், குந்தவையின் தோழி, ஊமை ராணி ஆகிய கதாபாத்திரங்களை மறந்துவிட்டேன். படத்தில் பார்க்கும்போதே நினைவுக்கு வந்தது என்பது சிலரது கருத்தாக இருந்தது.
Nobody noticed cause everyone was too busy 'noticing' Kundhavai @trishtrashers https://t.co/iEt6ice2qc
— Ashwin Kakumanu (@AshwinKakumanu) October 22, 2022