ஷங்கர்ன்னா சும்மாவா.. ஆனா ஷங்கர் பட தலைப்பு மாதிரியே இல்லையே.. ஆனா போஸ்டர் வேற மாதிரி.

Shankar next film movie update

இந்திய திரை உலகின் பிரமாண்ட இயக்குனர்., மீண்டும் அவர் பாணியில் ஒரு சகாப்தம் தயாராகி கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள். உணர்வும் கலையும் கை சேர்த்து கொண்டு நம்மை மகிழ்விக்க போகின்றன!! ஆனால் இந்த படம் தெலுங்கு மக்களுக்கு ஏற்றது போல் இருக்கும் என்பது தான் ஒரே கவலை. ஆனால் ஷங்கர் மேஜிக் எப்படியும் இருக்கும்.

RRR படம் மூலம் ராம்சரண்க்கு குளோபல் ஸ்டார் என்ற பட்டம் வேற கிடைத்துள்ளது. தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லா படத்திற்கு மேலையும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த படத்திற்கு மேல பெரிய எதிர்பார்ப்பு காரணம் இதில் இயக்குனர் ஷங்கர் என்ற பெரிய டேக் இருக்கிறது.

Shankar next film movie update

ஆனால் இந்த படத்தின் டைட்டில் ஷங்கர் படம் போன்றே இல்லையே என்று தான் தோன்றுகிறது. இங்கிலிஷ் போஸ்டர்ல தான் டைட்டில் Font ah ஷூ-ல போட்ருக்காங்கனு பார்த்தா தமிழ்லயும். மொத்தத்துல ஷங்கர் பட டைட்டில் மாதிரியும் இல்ல ஷங்கர் பட போஸ்டர் மாதிரியும் இல்ல. ஆனால் முன்னாடி ரிலீசான போஸ்டர் தான் ஷங்கர் படம் போன்று இருந்தது. எல்லாரும் கோட் சூட் போட்டு போவாங்களே.

ஷங்கர் அரசியல் கதையை தொட்டாலே அது வேற மாதிரி சம்பவம் பண்ணும் இந்த படமும் அப்படி தான். ஷங்கர் பண்ணிய எல்லா படத்திலும் அரசியல் இருக்கும். இந்த காலகட்டத்துக்கு ஏற்ற அரசியலை இந்த படத்தில் காட்டுவார் என்று நம்புகிறோம். படம் கண்டிப்பா சம்பவம் பண்ணும், அதில் சந்தேகம் இல்லை.

Latest Photos:

Related Posts

View all