ஏலேய் அது என் பொண்டாட்டி லே என்று கதறும் சத்தம் கேக்குதா.. ஜவான் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்திய சினிமா லியோ, சலார் படங்களுக்கு முன் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் ஜவான். இந்த படத்தின் நாயகன் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான். இந்த படத்தை நம்ம அட்லீ இயக்கியிருக்காரு. இந்த படம் வரும் செப்டம்பர் 7 அன்று திரையரங்கில் வெளியாகிறது. நீண்ட நாட்களாக இந்த படத்துக்கு தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகியது, அதற்கு பிறகு தான் இவ்வளவு hype உருவாகியுள்ளது. அட்லீ என்னதான் பழைய கதைகளையே மீண்டும் எடுப்பவரா இருந்தாலும் அவருடைய மேக்கிங்கை குறை சொல்லவே முடியாது அந்தளவு மாஸ் காட்டுவார். திரைக்கதை எல்லாம் அடுச்சுக்க ஆளில்லை.
தமிழ் சினிமாவில் மிகுந்த குறைந்த படத்திலேயே 300 கூடி வசூலை அள்ளிய இயக்குனர் அவரு. அதுவும் இப்போது ஷாருக் கான் உடன் இணைந்து படம் பண்ணியதால் இந்த படம் கண்டிப்பா 500 கோடிக்கு மேல் தான் வசூல் என்று சொன்னால் அது மிகையாகாது. உலகம் முழுக்க ஷாருக் கானுக்கு ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்தின் லவ் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா தான் ஹீரோயின். அட்லீக்கு அப்படியென்ன நயன்தாரா மீது ஒரு அன்பு என்று தெரியவில்லை எடுக்கும் எல்லா படங்களிலும் அவங்களை போட்டுர்ராரு. இசை சென்சேஷன் அனிருத் தான் இந்த படத்துக்கு இசை, செம்ம லவ் பாட்டு இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. நம்ம விக்கி தான் பாவம்.
Video: