என்ன பொண்ணு டா! டிரெண்டிங்காகும் ஷில்பா மஞ்சுநாத் தின் மேக்கப் வீடியோ வைரல்!
டிரெண்டிங்காகும் ஷில்பா மஞ்சுநாத் தின் மேக்கப் வீடியோ! ஷில்பா மஞ்சுநாத் திரைப்பட நடிகை மற்றும் “மிஸ் கர்நாடகா” பட்டம் வென்றுள்ள பிரபல மாடல் ஆவார். இவர் கன்னட திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னனி நடிகைகளுள் ஒருவராக புகழ் பெற்றுள்ளார்.
தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டுள்ள ஷில்பா மஞ்சுநாத், மாடலிங் துறையில் பணியாற்றி 2013-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் போட்டியாளராக பங்குபெற்று, 2013ஆம் ஆண்டின் “மிஸ் கர்நாடக” என்னும் பட்டம் வென்று புகழ் பெற்றுள்ளார்.
மாடலிங் துறையில் வெற்றி பெற்று சாதித்த இவர், பின் கன்னட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான “லைப் சூப்பர் குரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் “முன்கரு மலே 2” என்ற கன்னட திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இவர் மலையாளத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான “ரோசாப்பூ” என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரையிலும் நடிகையாக அறிமுகமானார். தமிழில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்த “காளி” திரைப்படத்தில் “பார்வதி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் 2019-ஆம் ஆண்டு “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யான்-ற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “கண்ணம்மா உன்ன” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமானது, இப்பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.
சமீபத்தில் கண்ணாடி முன் நின்று மேக்கப் செய்வது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. லேசாக மேக்கப் செய்து கொண்டு அவர் முகத்தை அப்படி இப்படித் திருப்பி தன் அழகை ரசிக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.