ஓஹோ ரெண்டு பேருக்கும் லவ்ஸ் ஓடுதா. என்ன உரிமையா விஷ் பண்ணிருக்காரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
என் இதய ராஜகுமாரிக்கு (அதிதி ராவ் ஹைதரி) பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்த சித்தார்த் போஸ்ட் தான் தற்போது இணையதளம் முழுக்க ட்ரெண்டிங். காரணம் இரண்டு பேரும் லவ் பண்றாங்களா என்று. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து “மகா சமுத்திரம்” என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த படம் மல்டி ஸ்டார்ரர் படம் உடன் சர்வானந்த் நடிச்சிருப்பார். அதிதிக்கு இந்த படத்தில் ஜோடி சித்தார்த்.
அதிதிக்கு இப்போ 36 வயசு ஆச்சுன்னா யாராவது நம்புவார்களா, அந்த அளவுக்கு பார்க்க யங்கா இருக்காங்க அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆச்சு என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இவ்வளவு வயசு ஆனாலும் அவங்க ஹீரோயின் material தான். நடிச்சது குறைந்த படங்களே இருந்தாலும் அந்த படங்கள் மூலம் இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அடுத்து என்ன படம் படம் என்று கேள்விகள் சமூக வலைத்தளத்தில் போயிட்டே இருக்கு.
சித்தார்த்தும் முன்னர் பல காதல் பண்ணிருக்கார். எதுவுமே திருமணத்தில் முடியல என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த்துக்கும் 2003ம் ஆண்டே கல்யாணம் ஆயிடுச்சு, ஆனால் அது நான்கு வருடம் மட்டுமே. அதற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அந்த பொண்ணு பேரு மேக்னா நாராயணன். அதற்கு பிறகு சமந்தா கூட லவ்வுல இருந்தாருன்னு ஒரு பேச்சு அடிபட்டது. பின்னர் தான் அவங்க நாக சைதன்யாவ கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
இருவருக்குமே கசப்பான பாஸ்ட் இருக்கு. அதையெல்லாம் மறந்து மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையை ஆரம்பிக்க வாழ்த்துக்கள். அதிதி பிறந்தநாளுக்காக சென்னை அவங்க வீட்டுக்கு சித்தார்த் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெண்டு பேரும் நல்ல pair தான்.
Post: