கல்யாணம் கூட எல்லா இடத்துக்கும் ஜோடியா போறாங்களே.. சித்தார்த்.. அதிதி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
நடிகர் நடிகைகள் இந்த காலத்தில் லவ் பண்ணுவது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை, ஆனால் யாருமே கல்யாணம் நிச்சயம் ஆகும் வரை நாங்க இரண்டு பேரும் லவ் பன்றோம் அப்டின்னு சொல்லவே மாட்டாங்க. அப்படி தமிழ் சினிமா ரசிகர் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கடந்த மாதத்தில் இருந்து கிடைத்து வருகிறது. ஆரம்பித்து வைத்தது ஹரிஷ் கல்யாண்.
நடிகர் ஹரிஷ் கல்யாண்க்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள், ஹரிஷ் கல்யாண் கல்யாண செய்தி கேட்ட பல ரசிகைகள் இணையத்தில் கதறினார். அடுத்த ஷாக் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் தான். அது கெளதம் -மஞ்சிமா மோகன் கல்யாணம் இருவருகேமே பெரிய பேன் பேஸ் இருக்கு. அதுவும் போச்சு. அதனால் பெரும் மனா உளைச்சலில் இருந்தவர்களுக்கு மேலும் ஒரு அடி.
இந்த அடி இடியாய் இறங்கியது. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படம். ஒப்பாரியே வைத்து விட்டனர். எந்த அளவுக்கு என்றால் ஐஸ்வர்யா லெட்சுமி அவங்களோட ஸ்டோரியில் நாங்க லவ் பண்ணவில்லை வெறும் பிரண்ட்ஸ் தான் இன்றி சொல்லும் அளவுக்கு பெண்கள் ஐஸ்வர்யாவின் inbox முற்றுகையிட்டனர்.
தற்போது இறங்கிய இன்னொரு அடி சித்தார்த் - அதிதி ராவ் relationship. எங்கேயும் எப்போதும், கணம் போன்ற படங்களில் நடித்தவர் ஷர்வானந். இவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது ஜோடியாக சித்தார்த் -அதிதி கலந்து கொண்டனர். அரசால் புரசலாக இரண்டு பெரும் லவ் பண்றாங்க என்று பேச்சு அடிபட்டது. இப்போ உறுதியே ஆயிடுச்சு.