பத்து தல.. நம்ம சிம்பு தான் கெத்து தல.. சும்மா மிரட்டி விட்டிருக்கார் மனுஷன்.. முழு விவரம்.
பாத்து தல சிம்புக்கு ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். அவரை முதல் ஒரு மணி நேரம் காட்டவே இல்லை. கதையும் அவர் இல்லாமலே அவரு எப்போ வருவாரு என்ற சஸ்பென்ஸுடன் போயிட்டே இருந்துச்சு நன்றாக அப்புறம் என்னடா ஹீரோ எண்ட்ரிய இன்டெர்வல்ல வெச்சிருக்கீங்க என்பது போல் இருந்தது சிம்பு வரும்போது.
இந்த படத்தில் முதல் பாதி முழுசா AGR என்ற கதாபாத்திரம் எப்படி தனக்கென ஒரு ராஜ்யம், சட்டம் எல்லாம் வைத்து ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்தற்கும் அசுரன் என்பதைப்போல் காட்டுகிறது. ஒரு ட்ரெயினை நிறுத்தும் இடம் ஒன்று இருக்கிறது. அதெல்லாம் செம்ம மாஸ். முதல் பாதியில் கெளதம் கார்த்திக்கு மீட்டி ரோல் என்று சொல்லலாம்.
சிம்பு வந்த பின்னர் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. சிம்பு தங்கையாக வரும் சித்தாரா கொஞ்ச நேரம் வந்திருந்தாலும் ரொம்ப நல்ல பண்ணிருக்காங்க. ஒரு குட்டி பாப்பா ஒன்னு நடிச்சிருக்காங்க, அவங்களுக்கும் AGR சீன்ஸ் எல்லாமே அற்புதம். ரொம்ப எதார்த்தமான காட்சிகள். பிரியா பவானி சங்கரும் நல்லா பண்ணிருக்காங்க.
படத்தில் என்ன பிரச்னை என்றால் படம் நல்லா விறுவிறுப்பா போயிடு இருக்கும் போது ஒரு ஸ்பீடு பிரேக்கர் மாதிரி பாட்டு, செண்டிமெண்ட் என்று வந்துவிடுகிறது. கெளதம் மேனன் ஒரு அரசியல் வில்லனா சில சீன்களில் மிரட்டுகிறார். கடைசியில் அந்த கிளைமாக்ஸ் பைட் இயம்ப நல்லா பண்ணிருந்தாங்க. ஒரு 15 நிமிடம் ட்ரிம் செய்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும்.
Rating: 3.5/5