என் உருவத்தை வெச்சு உங்களால இப்போ கிண்டல் பண்ண முடியலல.. அந்த விமர்சகரை வெச்சு செய்த சிம்பு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Simbu thanks meet video viral

சிம்பு நடிச்ச வெந்து தணிந்தது காடு படத்துக்கு விமர்சகர்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனம் தான். அப்போ அப்போ அங்கு அங்கு குறைகளை சொன்னாலும், அந்த குறைகளை எல்லாம் தாண்டி சிம்புவின் கை மேலோங்கி இருந்தது படத்தில். கடந்த ஒரு சில வருடங்களாக அவரை கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு தக்க பதிலடி அதுவும் பேக் டு பேக் கொடுத்துள்ளார்.

எப்படியும் பாத்து தல பாடமும் வேற லெவெலில் ஹிட் அடிக்கும். அதன்மூலம் ஹாட்ரிக் கொடுப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்று இந்த படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் பிரஸ் மீட் நடந்தது. இதில் இயக்குனர் கெளதம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நாயகன் சிம்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீண்ட நாள் கழிச்சு ரொம்ப ஜாலியா பேசுனா சிம்புவை நேத்து பார்த்தோம். அதில் அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அவர் யாரென்று உங்களுக்கே நன்றாக தெரியும். அவர் சிம்புவை மட்டுமல்ல அஜித்தை கூட உடல் ரீதியாக விமர்சனம் செய்து சர்ச்சைக்கு உள்ளவர். இப்போது தான் கொஞ்ச நாளாக அமைதியாக இருக்கிறார்.

நேற்று சிம்பு பேசும்போது, என்னை இந்த படத்துல உங்களாலவிமர்சிக்கவே முடியல தான, என்று ஒரு பார்வை பார்த்துட்டு சிரிச்சாரு பாருங்க, யாரெல்லாம் அவரை விமர்சிச்சாங்களோ அவங்களுக்கு அது சரியான பதிலடி. அதற்குப்பின் அவர் ஒரு வேண்டுகோளும் விடுத்தார். அதாவது என்னை உடலில் ரீதியா தாக்கி பேசுனீங்க நான் தாங்கிட்டேன். ஒரு சிலரால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. எப்போவுமே பாடி சேமிங் செய்து அடுத்தவர்களை ஹர்ட் பண்ணாதீங்க என்று கூறினார்.

மேலும் கெளதம் மேனனுக்கு இரண்டாம் பாகம் எழுதும் போது ரசிகர்கள் விசிலடிச்சு கொண்டாடுற மாதிரி ஹீரோவுக்கு அந்த மாதிரி மாஸ் சீன்ஸ் எல்லாம் வைங்க என்ற கோரிக்கையும் விடுத்தார்.

Viral Video:

Related Posts

View all