தளபதி STR ரசிகர்களுக்கு செம்ம விருது. வாரிசு படத்தின் முக்கியமான அப்டேட். முழு விவரம்.
![Simbu vijay combo soon](/images/2022/11/26/simbu-vijay-combo-soon-1-.jpg)
சினிமா அடுத்து எதிர்நோக்கி இருக்கும் பெரிய படங்கள் வாரிசு, துணிவு தான். இந்த வருடத்தின் ஆரம்பமே அடிதடியாதான் இருக்கப்போகுது. இதுல இவங்க என்ன சொல்றாங்கன்னா ரெண்டு பேரும் ஒரே தேதியில் தான் படம் வேற ரிலீஸ் பண்றாங்க என்று சமூக வலைத்தளங்களில் பரவலா பேசிட்டு இருக்காங்க. இதுமட்டும் நடந்தால் யார் தற்போது நம்பர் 1 ஸ்டார், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று தெரிந்துவிடும்.
என்ன முதல் நாள் வசூல் அப்படி இப்படி இருந்தாலும் கடைசியில் யாருடைய படம் அதிகமா வசூல் ஆகுது அப்படிங்கிறது வெச்சு தான் மற்ற விஷயம் எல்லாம் இருக்கிறது. துணிவு எப்போவும் போல அஜித் துப்பாக்கியுடன் action படம். ஆனால் விஜய் நீண்ட நாள் கழிச்சு பேமிலி சப்ஜெக்ட் நடிக்கிறார். குடும்ப ஆடியன்ஸ் வாரிசு படத்துக்கு தான் போவாங்க என்பது எங்களுடைய கணிப்பு.
![Simbu vijay combo soon](/images/2022/11/26/simbu-vijay-combo-soon-2-.jpg)
தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி வாரிசு படத்தின் அடுத்த சிங்கிள் அதாவது பாடலை பாடியிருப்பது சிம்புவாம். ஒரு பெப்பி நம்பர் என்று சொல்கின்றனர். இதுமட்டும் உண்மையாக இருந்தால் சம்பவம் தான். விஜய் டான்ஸ், சிம்பு குரல் ஐயோ நினைக்கும்போதே நிறுத்து. திரையரங்கு எல்லாம் இந்த பாடல் வரும்போது கண்டிப்பாக இரண்டாகி விடும். சிம்புக்கு அடுத்தடுத்து ரொம்ப நல்ல விஷயமா நடக்குது, ரொம்ப பாஸிட்டிவா இருக்கு.
அஜித்துடன் சிவகார்த்திகேயன் எடுத்த புகைப்படம் வேறு இப்போ வைரல் ஆச்சு. இது எல்லாமே அவங்க வாங்க படங்களுக்கு ரொம்ப நல்ல விஷயமா நடந்துட்டு இருக்கு. கடைசியில் அவங்களுக்கு தேவை ப்ரோமோஷன். அது எப்படி கெடச்சா என்ன. இரண்டு படங்களும் நன்றாக ஓடி வசூல் அள்ளட்டும்.