அடுத்த ஹிட் ரெடி.. மனுசனுக்கு எந்த கெட்டப் போட்டாலும் சூட் ஆகுது.. சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
போலிஸ் கதாபாத்திரம் ஏற்கும் ஹீரோவுக்கு ஒரு தனி கெத்து வேணும். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில கதாபாத்திரம் தான் கண்ணுக்குள்ளயே நிக்கும். ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு வேட்டையாடு விளையாடு, விஜய்க்கு தெறி , சூர்யாக்கு சிங்கம், அஜித்துக்கு என்னை அறிந்தால் போன்ற படங்கள்.
இவர்கள் வரிசையில் இந்த சினம் படம் அருண் விஜையை கொண்டு போய் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இளரத்தம், எப்போதுமே கோபத்துடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் இந்த படத்தில் வாழ்ந்துள்ளார்.
இந்த போலீஸ் கதாபாத்திரத்தின் பெயர் பாரி. தற்போது ரிலீசான ஸ்னீக் பீக் சொல்லுகிறது படம் எவ்வளவு intense ஆக இருக்கும் என்பது. மேலும் படம் வெறும் 1 மணி நேரம் 54 நிமிடங்கள் தான். அதுவும் இரண்டாம் பாதி வெறும் 49தே நிமிடங்கள் தான் என்று சொல்லப்படுகிறது.
தற்போது சமீபத்தில் வெளிவந்த 3 மணி நேர படங்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் அறிவோம். இந்த படம் அதிலிருந்து தப்பித்துள்ளது. இன்னும் படம் கொஞ்சம் crispஆகா இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
இந்த படத்தில் நோட் பண்ண வேண்டிய கதாபாத்திரம் பாலக் லால்வாயுடையது. அருண் விஜயோடு சேர்ந்து இவங்களும் ஊர் ஊராக சென்று படத்தை ப்ரொமோட் செய்துள்ளார். நிறைய நாயகிகள் செய்வதில்லை. இந்த படத்திற்கு பின் நிறைய பட வாய்ப்புகள் இவங்களுக்கு வர வாய்ப்புள்ளது.
வீடியோ: